அர்ச்சனாவை தொடர்ந்து ஆரியுடன் மல்லுக்கட்டும் சாம்.. இன்னைக்கு பல தரமான சம்பவங்கள் இருக்கும் போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவில் சம்யுக்தா ஆரியுடன் மல்லுக்கட்டுவது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதும் ஃபேவரிஸம் இருப்பதும் பச்சையாக தெரிகிறது. இதுகுறித்து ஆணித்தரமாக பேசி வருகிறார் ஆரி.
அதிலும் அர்ச்சனா வந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் வேற லெவல் குரூப்பிஸம் தலைத்தூக்கி வருகிறது. அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம் சேகர் போன்ற சிலரை பொம்மையாக வைத்துள்ளார்.

அர்ச்சனாவுடன் வாக்குவாதம்
இதனை நேற்று பாலாஜி கமலிடம் கூறினார். ஆனால் இந்த விவகாரம் குறித்து கடந்த வாரமே அர்ச்சனாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆரி. இதனால் அர்ச்சனா மட்டுமின்றி, ரியோ, சோம், நிஷா என பலரின் எதிர்ப்பையும் சம்பாத்தித்தார்.

மூன்றாவது புரமோ
அதன் தாக்கம் இன்றைய முதல் புரமோவில் தெரிந்தது. பெரும்பாலான ஹவுஸ்மேட்டுகள் ஆரியின் பெயரை நாமினேஷனுக்கு பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஹவுஸ்கீப்பிங்
அதில் கார்டன் ஏரியாவில் சுச்சி, ஆரி, சனம் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் சம்யுக்தா, காலையிலேயே ஹவுஸ்கீப்பிங் பண்ணிடுங்க என்று ஆரியிடம் கூறுகிறார்.

ஒரு சைடா இருக்கக்கூடாது?
அதற்கு ஆரி, அவங்க ஏன் நேத்து பண்ணல? அவங்கள பண்ண சொல்லுங்க.. ஒரு கேப்டனா ஒரு சைடா இருக்கக்கூடாது.. யாரு வேலை செய்யலையோ அவங்கள கேள்வி கேட்கனும் என்கிறார் ஆரி.

என்னை கூப்டுறீங்க?
அதற்கு, நான் ஒரு சார்பாக இருப்பதாக என்னை குற்றம் சாட்டுகிறீர்களா என கேட்கிறார் சம்யுக்தா. அதற்கு கேபி எல்லாம் சேர்ந்துதானே நைட் பண்ணிக்கலாம் என்று சொன்னார்கள், இப்போ எதுக்கு நீங்க என்னை கூப்டுறீங்க என கேட்கிறார்.

பிரச்சனை பண்ணனும்னு
அதற்கு அர்ச்சனா சொன்னதாக கூறி அவருக்கு ஆதரவாக சம்யுக்தா பேச, அவங்களுக்கு வக்காலத்து வாங்கி ஏன் என்கிட்ட பேசுறீங்க, நீங்களும் உங்க டீமூம் ஏன் என்னை கார்னர் பண்றீங்க என கேட்கிறார் ஆரி. அதற்கு ஒரு பிரச்சனை பண்ணனும் என்றே பண்றீங்க ஆரி என கூறிக்கொண்டே உள்ளே செல்கிறார்.

வரவேற்கும் ரியோ
இந்த ஆர்க்யூமெண்டையும் அர்ச்சனா, ரியோ, பாலாஜி, சோம் ஆகியோர் வெறுமனே வேடிக்கை பார்ப்பதாக உள்ளது. உள்ளே செல்லும் சம்யுக்தாவை ரியோ வாருங்கள் என வரவேற்பதாக உள்ளது இந்த புரமோ.


Click it and Unblock the Notifications











