செம சம்பவம்.. ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள்.. லீக்கான போட்டோஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil காக 4 போட்டியாளர்களை மட்டும் தனிமைப்படுத்துஉள்ளனர்

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதற்கான பணிகளில் நிகழ்ச்சி குழு முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்று அறிய ரசிகர்கள் பேரார்வம் காட்டி வருகின்றனர்.

80 நாட்கள் மட்டுமே

80 நாட்கள் மட்டுமே

இம்முறை 12 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாகவும் 80 நாட்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தகவல் வெளியானது. இருப்பினும் நிகழ்ச்சி சுவாரசியமாக இருந்தால் நிகழ்ச்சியின் நாட்கள் கூட்டப்படும் என்றும் கூறப்பட்டது.

ரசிகர்கள் சந்தேகம்

ரசிகர்கள் சந்தேகம்

இதனால் கடந்த சீசன்களை போல் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்குமா என்று ரசிகர்கள் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். இதனிடையே நிகழ்ச்சிக்கு உறுதியான போட்டியாளர்கள் என நாள் தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.

போட்டியாளர்கள் தேர்வு

போட்டியாளர்கள் தேர்வு

பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வரும் போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கேப்ரில்லா - ஷிவானி நாராயணன்

கேப்ரில்லா - ஷிவானி நாராயணன்

அதன் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உறுதியான பிரபலங்கள் என ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது. அதில் அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் சிங்கர் அஜித்

சூப்பர் சிங்கர் அஜித்

மேலும் நடிகைகள் சனம் ஷெட்டி, கிரண், ரேகா, விஜே அர்ச்சனா மற்றும் நடிகர் ஆரி, சூப்பர் சிங்கர் வின்னர் அஜித் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

நான்கு சுவர்களுக்குள்

நான்கு சுவர்களுக்குள்

தற்போது நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் பகுதியில் தனி அறையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதேபோல் நடிகர் ரியோ ராஜூம் 4 சுவர்களுக்குள் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

ஒரே ஹோட்டலா?

ஒரே ஹோட்டலா?

இதனால் இவர்கள் இருவரும் ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களா? அல்லது வெப்வேறு ஹோட்டலா என்ற தகவல் இல்லை. இதனிடையே அக்டோபர் 4ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் முதல் நாளில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வழக்கமான நிகழ்ச்சியும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X