வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்து குத்திய ஹவுஸ்மேட்ஸ்.. அவங்களுக்கு மட்டும் ஏன் அப்படி ஒரு ஃபோகஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதில் ஷிவானி, கேப்ரில்லா, சனம் ஷெட்டி என இளம் நடிகைகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அதற்கான புரமோ வெளியாகியுள்ளது.

வாத்தி கம்மிங்
முதல் நாளுக்கான முதல் புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களை எழுப்பிவிட விஜயின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை ஒளிபரப்பியுள்ளனர். இதனைக் கேட்ட போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் திரண்டு செம ஆட்டம் போட்டுள்ளனர்.

செம குத்து..
கேப்ரில்லா செம குத்து குத்து குத்தியுள்ளார். அதேபோல் நடிகை ஷிவானியும் இறங்கி செய்துள்ளார். வேல்முருகன், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் என பலரும் அவரவருக்கு தெரிந்த ஸ்டெப்புகளை போட்டுள்ளனர்.

அப்படி ஒரு ஃபோஸ்
இதில் ஷிவானிக்கு மட்டும் டாப் டூ பாட்டம் ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளனது. அவரது தொடை முதல் முகம் வரையும் முடியை கோதிவிடுவது வரையும் இன்ச் இன்ச்சாக கேமராவாலேயே அளந்துள்ளனர்.

ரவுசு தாங்க முடியலையே
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். எப்பா இதுங்க ரவுசு தாங்க முடியலையே என விணு சக்கரவர்த்தி காதை பொத்திக்கொள்ளும் போட்டோவை போட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

அட போங்க பாஸ்
வாத்தி கம்மிங் பாடலை கேட்ட இந்த நெட்டிசன், நாங்களே இன்னும் மாஸ்டர் படம் எப்ப ரிலீஸ் ஆகும்னு தெரியாம காண்டுல இருக்கோம், இதுல நீங்க வேறையாடா, ஏன்டா ஏன் என விரக்தியாக கேட்டுள்ளார்.

காலையிலேயே ஃபுல் கோட்டிங்
மற்றொரு நெட்டிசனான இவர் முதல் நாள்லாம் இப்படி தான் இருக்கும்.. என்ஜாய் என கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் காலையிலேயே ஃபுல் கோட்டிங் லிப்ஸ்டிக் போட்டு ஆடற ஒரே பொண்ணு ஷிவானிதான் என கிண்டலடித்துள்ளார்.

எத்தனை சகுனி
ஹவுஸ்மேட்ஸின் டான்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இதோ ஆட்டம்போட ஆரம்பிச்சிடோங்கோ!... எப்ப முடிப்பாங்க? என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், இப்போ " எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு" தான் இருப்பிங்க இந்த கேங்குல எத்தன சகுனி,எத்தன நாரதர், எத்தன ஆள் காட்டி இருக்குகனு வெயிட் பண்ணி பாப்போம் என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











