தாறுமாறு.. தப்புன்னா தட்டி கேட்பேன்.. பிக்பாஸ் 4ன் மேலும் ஒரு டீசர் அவுட்.. அசத்தலோ அசத்தல்!

சென்னை: பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மேலும் ஒரு டீசர் வெளியாகி குதூகலப்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான முதல் டீசர் கடந்த வாரம் வெளியானது. இதில் காப்பி கப்புடன் வந்த கமல் வேலைய ஆரம்பிக்கலாமா என்றார்.

இதனால் அடுத்த அப்டேட் எப்போது வரும் என காத்திருந்தனர் ரசிர்கர்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் குரலில்

பிக்பாஸ் குரலில்

இதில் டான்ஸுடன் கதவை திறக்கிறார் கமல்.. சொன்னப்படி கேளு.. தம்பி சொன்னப்படி கேளு.. சொல்லுறது பாஸ்..என்ற பாடல் பின்னால் ஒலிக்க பல காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்த டீசர் பாடலில் வரும் எல்லாக் கேரக்டருமே பிக்பாஸ் குரலில் பேசுவதாக உள்ளது.

ஆன்லைன் கிளாஸ கவனியுங்க

ஆன்லைன் கிளாஸ கவனியுங்க

ஆன்லைன் கிளாஸை கவனிக்காமல் இருக்கும் சிறுவனுடன் மல்லுக்கட்டும் அவரது தாய் தனக்குள் இருக்கும் பிக்பாஸ் மூலம், பிக்பாஸ் குரலில், அர்ஜுன் அராத்து பண்ணாம ஆன்லைன் கிளாஸ கவனி என்கிறார். அடுத்த ஷாட்டில் கமல் சைகையிலேயே முத்தம் கொடுத்து கொஞ்சலுடன் கெஞ்சுகிறார்.

முந்திரி மாதிரி முன்னாடி..

முந்திரி மாதிரி முன்னாடி..

அடுத்து, மளிகைக் கடையில் மக்கள் கூட்டத்தை பார்க்கும் கடைக்காரர் தனக்குள் உள்ள பிக்பாஸை கொண்டு வந்து அந்த கணீர் குரலில் முந்திரி மாதிரி முன்னாடி நிக்காம ஒன்றையடி கேப் விட்டு நில்லுங்க என்கிறார். அப்போதும் கமல் சைகையால் செய்து காட்டுகிறார்.

டிஷ வாஷ் பண்ணுங்க

டிஷ வாஷ் பண்ணுங்க

அடுத்து வெட்டியாக மொபைல் போனை நோண்டிக் கொண்டிருக்கும் மனைவியை வேலை வாங்கும் கணவரிடம், அவரது மனைவி வெட்டியா வீண்கதை பேசாம இந்த வாரம் டிஷ நீங்க வாஷ் பண்ணுங்க என்று தனக்குள் இருக்கும் பிக்பாஸை எழுப்பி அந்த காந்த குரலில் சொல்கிறார்.

விதிமுறைக்கு மீறினது

விதிமுறைக்கு மீறினது

மாத்திரை வாங்குவதாக சொல்லி ஊர்சுற்றும் இளைஞர்களை பிடித்து தோப்புக்கரணம் போட வைக்கும் போலீஸ்காரர், மாத்திரை வாங்குறேனு சொல்லி ஏமாத்துறது விதிமுறைக்கு மீறினது என்று பிக்பாஸ் குரலில் பேசுகிறார். அப்போது மீசையை முறுக்கி நாக்கை துருத்தி மிரட்டுகிறார் கமல்.

வெளியே போகக்கூடாது

வெளியே போகக்கூடாது

அடுத்து பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பெண் காரில் இருப்பவர்களிடம் பெட்ரோல் போடனும்னா முதல்ல மாஸ்க்க போடுங்க என்கிறார். அதுவும் பிக்பாஸின் அந்த காந்த குரலில். இதேபோல் முதியவர் ஒருவர் குடையுடன் வெளியே கிளம்ப, அவரது மனைவி பிக்பாஸ் குரலில் லாக்டவுன் நேரத்தில் வெளியே போகக்கூடாது என்கிறார்.

நல்லதுன்னா தட்டி குடுப்பேன்

நல்லதுன்னா தட்டி குடுப்பேன்

டீசர் பாடல் முடிய கலக்கலாக வரும் கமல், மூன்று வருஷமா உங்களுக்கு பரிட்சயமான இந்த குரல் இப்ப உங்களுக்குள்ள இருந்தே ஒலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. தப்புன்னா தட்டி கேட்பேன்.. நல்லதுன்னா தட்டி குடுப்பேன்.. என்று கூறி முடிக்கிறார்.

அள்ளிக் கொஞ்சலாம்

அள்ளிக் கொஞ்சலாம்

முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த டீசர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கமலின் ஒவ்வொரு அசைவும் அத்தனை அழகாக அள்ளிக் கொஞ்சலாம் போல் உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X