யப்பா.. அவர் சுரேஷ் இல்லப்பா.. ஆம்பள வனிதாப்பா.. அடேங்கப்பா..நேத்து ஷிவானி.. இன்னிக்கு அனிதா சம்பத்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதா சம்பத்துக்கும் இடையே செம வாக்குவாதம் நடப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
காலை முதல் வெளியான இரண்டு புரமோக்களுமே இன்னைக்கு செம சரக்கு இருக்கு என்பதை போன்று இருந்தது.

பெரும் வாக்குவாதம்
இவற்றிற்கு முத்தாய்ப்பாக மூன்றாவது புரமோ வெளியாகி மிரள வைத்துள்ளது. மூன்றாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டு சமையலறையில் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடப்பதாக உள்ளது.

பேச மாட்டேன்
அதில் பேசும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நான்லாம் நியூஸ் ரீடர் கிட்ட பேசவே மாட்டேன், அவங்க பேசுனா எச்சில் தெறிக்கும்னு சொன்னீங்க.. அது எனக்கு ரொம்ப ஹர்ட்டா இருந்தது என்கிறார். அதற்கு நான் அப்படியெல்லாம் பேசவே இல்ல என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.

லோகிரேட்
தொடர்ந்து பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி, ஒன்னும் இல்லாததை பிடிக்கலன்னு சொன்னது எனக்கும் பிடிக்கல.. சிலருக்கு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதற்கு எச்சில் தெறிக்கும் என்று கூறியது லோகிரேடா இருந்துச்சு.. என்கிறார் அனிதா சம்பத்.

பெரும் படமே காட்றேன்
மேலும் குறும்படம் வேண்டுமானால் போட்டு காட்டுங்கள் என அனிதா கூற குறும்படம் என்ன பெரும்படமே காட்றேன் என்று கூறி சிரித்தப்படியே இடத்தை விட்டு நகருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடக்க நடிகை ரேகா உட்பட மற்ற ஹவுஸ்மேட்டுகள் சமாதானப்படுத்துகின்றனர்.

வனிதாவையே மிஞ்சிடுவாரு
இப்படியாக முடிகிறது இந்த மூன்றாவது புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள், நேத்து ஷிவானி செல்லத்துக்கிட்ட வம்பு பண்ணீங்க இன்னைக்கு அனிதா செல்லத்துக்கிட்டயா என கேட்டு ஆதங்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் போற போக்கை பார்த்த வனிதாவையே மிஞ்சிடுவாரு போல சுரேஷ் சக்கரவர்த்தி என கிண்டலடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











