அனிதாவுக்கு நச் பதிலடி கொடுத்த மொட்டை அங்கிள்.. அண்ட புளுகு புளுகி அழும் அனிதா.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்த மூன்றாவது புரமோ நேற்று இரவு பிக்பாஸ் வீட்டின் கிட்சனில் நடந்த கூத்துகளின் தொடர்ச்சியாக தெரிகிறது.
நேற்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியாக கிட்சனில் அவ்வளவு பெரிய அதகளம் நடந்தது. அதன் முடிவாக கிட்சனை விட்டு வேக வேகமாக வெளியேறினார் சுரேஷ்.

இஷ்டம் இல்லை
ரேகா கூப்பிட கூப்பிட வெளியே போயிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவில் நான் குக்கிங் டீமை விட்டு வெளியேறுகிறேன் என சுரேஷ் கூறியதாக தெரிகிறது. அது தொடர்பாக பேசும் ரேகா, சுரேஷ் ஜி குக்கிங் டீமை விட்டு வெளியேறுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்கிறார்.

இந்த மேடமுடன்தான்..
உடனே அவரிடம் சரண்டராகும் சனம் ஷெட்டி, நீங்கள் இல்லாவிட்டால் நானும் இருக்க மாட்டேன் என கட்டிப்பிடித்துக் கொண்டு பேசுகிறார். அதற்கு சனம் கூட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எனக்கு இந்த மேடம்முடன்தான் பிரச்சனை என அனிதாவை காட்டுகிறார்.

என்ன அக்கா பண்ணேன்?
என்னால் என்ன பிரச்சனை என அனிதா கேட்க, உனக்கு நான் சொன்னால் புரியாதும்மா, குறும்படம்தான் வேணும் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். உடனே அழுதுக்கொண்டு உள்ளே போகும் அனிதா, அறந்தாங்கி நிஷா மற்றும் சோமுவிடம் நடந்ததை எக்ஸ்ட்ரா பிட்டுடன் கூறி, நான் என்ன அக்கா பண்ணேன், என்னை வந்து நோண்டுகிறார் என கதறுகிறார்.

அண்ட புளுகு புளுகி
இதனை பார்த்த நெட்டிசன்கள், எப்படியோ நினைத்தப்படி எல்லா புரமோவிலேயும் வந்து விடுகிறீர்கள் அனிதா என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் ஒன்னுமே பண்ணாதது போதல் உத்தமி வேஷம் போடாதீங்க அனிதா, அண்ட புளுகு புளுகிட்டு அழுகை வேறயா என்று சாடியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











