எல்லா கதைக்குமே ரெண்டு பக்கம் இருக்கு.. இன்னும் ஒரே நாள்தான்.. வெளியானது பிக்பாஸின் அசத்தல் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரே நாள் மட்டுமே உள்ள நிலையில் அசத்தல் புரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளை முதல் தொடங்க உள்ளது.

நாளை மாலை கிராண்டாக தொடங்க உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. முன்பே தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கொரோனா காரணமாக நெடும் தாமதத்திற்கு பிறகு தற்போது தொடங்குகிறது.

போட்டியாளர்கள் அறிமுகம்

போட்டியாளர்கள் அறிமுகம்

நாளை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களின் அறிமுகம் கலை நிகழ்ச்சிகளோடு நடைபெறுகிறது. போட்டிக்கு தேர்வாகியுள்ள பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னமும் இழுபறி

இன்னமும் இழுபறி

இன்னமும் போட்டியாளர்கள் பங்கேற்பதில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிராண்ட் ஓபனிங் இன்று ஷுட் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சிக்கான புரமோ கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

பஞ்ச் வசனத்துடன்

பஞ்ச் வசனத்துடன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கிறார். 5 நாட்கள், 4 நாட்கள், 3 நாட்கள் என கூறி ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குடன் கூறி வந்த கமல்ஹாசன் இன்று இன்னும் ஒரே நாள்தான் என்று பேசும் புரமோ வெளியாகியுள்ளது.

ஒன் டே டூ கோ

ஒன் டே டூ கோ

அதிலும் வழக்கம் போல பஞ்ச் வசனம் பேசியிருக்கிறார் கமல். அதாவது எல்லா கதைக்குமே இரண்டு பக்கங்கள் இருக்கு.. இருவர் சொல்வதும் உண்மை வெல்வதும்.. ஒன் டே டூ கோ என ஸ்டைலாக முடித்திருக்கிறார்.

நாங்களும் ரெடி

நாங்களும் ரெடி

இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், வாங்க தலைவரே அதற்காகதான் காத்திருக்கிறோம் என பதில் கூறியுள்ளனர். இன்னும் சிலர் நாங்களும் ரெடி வாங்கோ.. என்ன இந்த முறை டைம்தான் பிரச்சனை என்றும் கூறியுள்ளனர் ரசிகர்கள்.

தேங்கிக்கிடக்கும் சந்தோசம்

தேங்கிக்கிடக்கும் சந்தோசம்

புரமோவை பார்த்த இந்த ரசிகர், நடக்கும் கூத்துகளை கூட்டமாக நின்று வேடிக்கை பார்க்க நாங்க ரெடி.. என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரான இவர் தேங்கி கிடக்கும் சந்தோசத்தை திரும்பவும் தந்திட வருகிறார் நம்மவர் என தனது மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X