நல்லாதானே போச்சு.. ஏன் திடீர்னு இப்படி.. பட்டன் போடாமல் வில்லங்கமாய் போஸ் கொடுத்த அஜித் பட நடிகை!
சென்னை: சட்டையின் பட்டன்கள கழட்டிவிட்டு வில்லங்கமாய் போஸ் கொடுத்த அஜித் பட நடிகையை நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபிராமி. மாடலான இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக அபிராமி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகுதான் ரிலீஸானது.

முகென் மீது காதல்
பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே கவின் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக சக தோழிகளிடம் கூறிய அபிராமி, அடுத்த சில நாள்களிலேயே கவினிடம் காதலை சொன்னார். ஆனால் அவர் அபிராமியின் காதலை ஏற்காததால் முகெனை காதலிக்க தொடங்கினார் அபிராமி.

கைவிடப்பட்ட காதல்
ஆனால் முகென் அவரை காதலிக்க மறுத்தார். இதனால் எப்போதும் அவரை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினார் அபிராமி. பின்னர் பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் அந்தக் காதலையும் விட்டார் அபிராமி.

நேர்கொண்ட பார்வை
அடுத்தடுத்து காதல்கள், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் என வெளியானதால் அவரது பெயர் டேமெஜானது. இருப்பினும் நேர்கொண்ட பார்வை படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

பட்டன் போடாமல்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி வந்தார் அபிராமி. பின்னர் நார்மலான போட்டோக்களை வெளியிடத் தொடங்கினார். இந்நிலையில் தற்போது சட்டை பட்டன்கள் மொத்தத்தையும் கழட்டிவிட்டு செம கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார் அபிராமி.

அடிக்கிற வெயிலுக்கு
அதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் நல்லாதானே போயிக்கொண்டிருந்தது. திடீரென என்ன ஆனது என கேட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், அடிக்கிற வெயிலுக்கு சட்டை போடாமலே இருக்கலாம் தோழி என கிண்டலாக கூறி வருகின்றனர்.

எதிர்பார்க்காத போஸ்
மற்றொரு நெட்டிசனான இவர், ரொம்ப அழகா இருக்கீங்க வேற லெவல் நாங்க எதிர்பார்க்காத ஒரு போஸ் என தெரிவித்துள்ளார். அபிராமியின் போஸை பார்த்த இந்த நெட்டிசன், ஓ சட்டே மேலே எவ்ளோ பட்டன் (போடாம)? என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











