கமல் ஸ்டைலில் ஆடை பிராண்ட் ஆரம்பித்த பிக்பாஸ் பிரபலம்.. பேர பாத்தீங்களா.. வேற லெவல்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கமல் ஸ்டைலில் ஆடை பிராண்டை ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். மாடலான இவர் ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

விளம்பர படங்கள் பலவற்றை இயக்கியும் உள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்திருந்தார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

அந்தப் படத்தில் அபிராமியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அபிராமி.

கவினுடன் காதல்

கவினுடன் காதல்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளிலேயே சக போட்டியாளரான கவினை காதலிப்பதாக கூறினார். ஆனால் கவின் சாக்ஷியை காதலிக்க தொடங்கியதால், முகென் ராவ் பக்கம் திரும்பினார் அபிராமி.

ஏற்க மறுத்த முகென்

ஏற்க மறுத்த முகென்

ஆனால் முகென் ராவும் தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறி அவரது காதலை ஏற்க மறுத்தார். இதனால் முகெனை ஒருதலையாக காதலித்த அபிராமி, ஒரு கட்டத்தில் அவருடனான காதலை பிரேக் அப் செய்து கொண்டார்.

எக்கச்சக்க கிளாமர்

எக்கச்சக்க கிளாமர்


தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அபிராமி, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். எக்கச்சக்கமாக கிளாமர் காட்டியும் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைத்தது போல் தெரியவில்லை.

ஆடை பிராண்ட்

ஆடை பிராண்ட்

இதனைதொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அபிராமி. இந்நிலையில் அபிராமி தனது சொந்த ஆடை பிராண்டை தொடங்கியுள்ளார். அந்த விஷயத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.

முதல் பேபி ஸ்டெப்

முதல் பேபி ஸ்டெப்

இது குறித்த வீடியோவைப் பகிர்ந்த அபிராமி, "எனது முதல் பேபி ஸ்டெப். என் பெயரில் ஒரு ஆடை பிராண்ட் வேண்டும் என்று என் வாழ்க்கையில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை... உங்கள் ஆதரவை தாருங்கள். நிறைய அன்பும் நன்றியும்" எனத் தெரிவித்துள்ளார்.

கமல் தொடங்கிய பிராண்ட்

கமல் தொடங்கிய பிராண்ட்

அபிராமி தொடங்கியுள்ள ஆடை பிராண்டுக்கு அபிராமி குர்தீஸ் என பெயர் வைத்துள்ளார். அபிராமியின் இந்த முயற்சியைப் பார்த்தவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 4 ஃபினாலே நிகழ்ச்சியில் கமல் தனது பெயரில் கைத்தறி நெசவு ஆடைகளுக்கான பிராண்டை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்ககது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X