பிக்பாஸ் நடிகையின் புதிய படம்... சூர்யா பாடல் வரிகளில் உருவான டைட்டில்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடையில் வந்து கலந்துகொண்டவர் நடிகை காஜல் பசுபதி. துடுக்கான பேச்சால் சில சர்ச்சைகள் இந்த நிகழ்ச்சியில் இவரால் வந்தது. பின் மன்னிப்புக் கேட்டு மற்றவர்களுடன் சமாதானமாகி விட்டாலும் இந்த நிகழ்ச்சியில் அவர் இருந்தது என்னவோ 16 நாட்கள் மட்டும் தான்.
பிக்பாஸ் பிரபலங்கள் பலர் படங்களில் கமிட்டாகி பிசியாகிவிட்ட நிலையில் இவர் ஏற்கெனவே 'கலகலப்பு 2' படத்தில் ஒரு ரோலில் கமிட்டானார். இதைத் தொடர்ந்து அவர் 'ஒன்றா இரண்டாக ஆசைகள்' என்ற படத்தில் நடிக்கிறாராம். அபிலேஷ் ரவி இயக்கும் இப்படத்தின் படக்குழு விவரம் நேற்று வெளியானது.

இப்படத்தின் டைட்டில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த 'காக்க காக்க' படத்தில் இடம்பெற்ற 'ஒன்றா இரண்டா ஆசைகள்... எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா...' என வரும் பாடலின் வரிகளில் இருந்து உருவாகி இருக்கிறது.
அஷ்வின் ஜெரோம், காஜல் பசுபதி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் அபிலேஷ் ரவி இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார். ராஜ் கே சோழன் இசையமைக்கும் இப்படத்திற்கு இளையராஜா எஸ் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.


Click it and Unblock the Notifications











