மீண்டும் நாடா காடா டாஸ்க்.. சிரிக்க வச்சா மட்டும் போதுமாம்.. தாங்க முடியலடா சாமி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கண்ணீருடன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது தெரியவந்தது.
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

தங்கமே உன்னைத்தான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் என்பதால் எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் பிக்பாஸ். அதோடு பழைய டாஸ்க்குகளையும் தூசி தட்டி வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில், தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே டாஸ்க்கை கொடுத்தார்.

நாடா காடா டாஸ்க்..
தங்கத்திற்கு பதில் சாப்பிடும் ஐட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த துண்டு சீட்டுக்கள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜ உடையிலும் அரக்கர்கள்..
இதில் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து அசுரர்களாகவும், மனிதர்களாகவும் உள்ளனர். மனிதர்களாக இருப்பவர்கள் ராஜ உடையிலும் அரக்கர்களாக இருப்பவர்கள் அரக்க உடையிலும் உள்ளனர்.

ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம்
இதில் சிலையாய் மாறிய நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரி மன்னர் உடையில் அசத்தலாக உள்ளார். இப்போதும் இந்த டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

சுவாரசியமாக இருக்கும்
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டாஸ்க்கில் முக்கிய போட்டியாளரே சுரேஷ் தாத்தாதான், அப்படி இருக்கும் போது அவர் இல்லாமல் எப்படி இந்த டாஸ்க் சுவாரசியமாக இருக்கும் என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











