அதிர்ச்சி.. பிக்பாஸ் அனிதாவின் அப்பா திடீர் மரணம்.. மகளை பார்க்காமல் ரயிலிலேயே உயிர்பிரிந்த சோகம்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் அப்பா திடீரென மரணமடைந்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் அனிதா சம்பத். எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
செய்திகளில் ஒரே மாதிரி ஃபிரேமில் பார்க்கப்பட்ட அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சியில் க்யூட்டாக பொம்மை போன்று என்ட்ரி கொடுத்தார்.

சில படங்களில்..
எழுத்தாளர் ஆர்சி சம்பத்தின் மகளான அனிதா சம்பத், செய்தி வாசிப்பாளர் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். காலா, 2.0, காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், டேனி உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களிலும் செய்தியாளராகவும் நடித்துள்ளார் அனிதா சம்பத்.

திருமணம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்தார்.

புரமோவில்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தியை சீண்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். தொடர்ந்து புரமோவில் இடம் பெற வேண்டும், வெளியே எப்படி காட்டுவார்கள் என்ற கான்ஷியஸிலேயே இருந்தார்.

டாஸ்க்குகளில் செம
இதனால் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டார். இருந்த போதும் பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக விளையாடியதாலும் டாஸ்க்குகளில் பட்டையை கிளப்பியதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

ஆக்ரோஷமான அனிதா
இந்நிலையில் கடந்த வாரம் ஆரியை தவறாக காட்ட முயற்சித்து ரொம்பவே ஆக்ரோஷமானார். நாக்கை துருத்தி கையை நீட்டி மோசமாக நடந்துகொண்டார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர்.

அதிகாரப்பூர்வமாய்..
ரசிகர்களின் கோபத்தின் வெளிப்பாடாக பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியேறினார் அனிதா சம்பத். அவர் வெளியேறிய அதிகாரப்பூர்வ எபிசோட் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பப்பட்டது.

பெரும் துயரம்
ஃபைனலுக்கு செல்லும் தகுதி பெற்ற அனிதா சம்பத், தன்னுடைய கோபத்தாலும் தவறான கணக்காலும் அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அனிதா சம்பத்தின் வீட்டில் பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது.

மாரடைப்பால் மரணம்
அனிதாவின் அப்பாவான எழுத்தாளர் ஆர்சி சம்பத் மரணமடைந்துள்ளார். பெங்களூருக்கு பயணம் செய்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர்பிரிந்தது தெரியவந்துள்ளது.

ஆம்புலன்ஸ் மூலம்
அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது. இந்த திடீர் மரணம் அனிதா சம்பத்தின் குடும்பத்தினர் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நேரில் பார்க்கவில்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா சம்பத் இன்னும் தனது தந்தையை நேரில் பார்க்கவில்லை. அனிதாவின் தந்தை காலமான செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் ரசிகர்கள், அனிதாவுக்கு ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











