இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தனது மனைவியை பார்த்து 30 நாட்களாகிவிட்டதாக உருகியுள்ளார் ஒரு பிரபலம்.
சன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்களில் ஒருவர் அனிதா சம்பத். பல ஆண்டுகளாக சன் டிவியின் மெயின் நியூஸில் செய்தி வாசித்து வரும் அனிதா சம்பத் பல படங்களிலும் நடித்துள்ளார்.
அனிதா சம்பத் கடந்த ஆண்டுதான் தனது காதலரான பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆடியன்ஸ் மீதே கண்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் அனிதா சம்பத். ஆடியன்ஸ் மீதே கண்ணாய் இருக்கும் அனிதா, தொட்டதுக்கெல்லாம் அழுவது, சின்ன சின்ன பிரச்சனையெல்லாம் பேசி பெரிதாக்குவது என இருந்து வருகிறார்.

பெரும் எரிச்சல்
இதனால் சமுக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். புரமோவில் வரவேண்டும் என்பதற்காகவே அதுது புலம்பி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

கணவர் பிரபாகரன்
இந்நிலையில் அனிதா சம்பத்தின் சோஷியல் மீடியா பக்கத்தை அவரது கணவரான பிரபாகரன் நிர்வகித்து வருகிறார். அவ்வப்போது அனிதா சம்பத் குறித்து தனது சமூக வலைதள பக்கத்திலும் கருத்து தெரிவித்து வருகிறார் பிரபாகரன்.

மனைவியை நினைத்து உருகி..
சமீபத்தில் கூட தனது மனைவி குறித்து விமர்சித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷை கடுமையாக போடா வாடா என விளாசினார் பிரபாகரன். இந்நிலையில் தனது மனைவி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருகியுள்ளார் பிரபாகரன்.

ரொம்ப மிஸ் பண்றேன்
அனிதாவை பிரிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆகிவிட்டது என்றும், இது எனக்கே ரொம்பப் புதுசா இருக்கு என்று ஒரு பதிவு செய்துள்ளார். லவ் பண்ற டைம்ல இருந்து இப்ப வரைக்கும் இவ்வளவு நாள் நாங்க பார்த்துக்காம இருந்ததில்லை என்றும் இதுதான் பர்ஸ்ட் டைம் என்றும் எனக்கே ரொம்ப புதுசா இருக்கு என்றும் நான் உண்மையிலேயே என் செல்லமாவை மிகவும் மிஸ் செய்கிறேன்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரம்
பிரபாகரனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அனிதா சம்பத் தனது இன்ஸ்டா பதிவில், தனது கணவர் ஒரு குழந்தை நட்சத்திரம் என்றும் ஹீரோவாக ஆசைப்பட்டார் ஆனால் நடக்காமல் போய்விட்டது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications