ஓவியா, யாஷிகா ஆனந்த், ஆஷிமா நர்வால் என வாழ்ந்திருக்கிறாரு ஆரவ்.. ராஜபீமா டிரைலர் ரிலீஸ்!
சென்னை: பிக்பாஸ் முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஆரவ்வின் ராஜபீமா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரவ்வுக்கு கிடைத்த முதல் படம் ராஜபீமா. ஆனால், இந்த படம் ரிலீசாக தாமதம் ஆன நிலையில், சரண் இயக்கத்தில் உருவான மார்க்கெட் ராஜா படம் முதலில் ரிலீசானது.
ஆனால், மார்க்கெட் ராஜா படம் ஆரவ்வுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
விரைவில் வெளியாகவுள்ள ராஜபீமா படமாவது ஆரவ்வுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஓபனிங் கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜபீமா டிரைலர்
நரேஷ் சம்பத் இயக்கத்தில் சைமன் கிங் இசையமைப்பில் ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜபீமா. கும்கி படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் யானையை வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது. தந்தத்திற்காக யானையை கடத்துவது கொலை செய்வது மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. அதனை மையமாக வைத்து இந்த ராஜபீமா உருவாகியுள்ளது என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

ஹீரோயின் எங்கடா
ராஜபீமா படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். ஆனால், டிரைலரில் நாயகியை அதிகளவில் காட்டவில்லை. அதற்கு பதிலாக கேமியோவாக வரும் பிக்பாஸ் ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் தான் டிரைலரில் யானையை விட அதிக காட்சிகளில் நிறைந்திருக்கின்றனர்.

கோமாளிக்கு பிறகு
ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் வில்லனாக நடித்திருந்த இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமாரை தொடர்ந்து நடிகர் நாசர் இந்த படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாம் பழைய ராம் லக்ஷமன் படத்தில் நம்பியார் - கமல் காட்சிகளாக தெரிகிறது.
விஜய் ரெஃபரென்ஸ்
சிறு வயதிலேயே ஆரவ்வுக்கு ஒரு குட்டி யானை நண்பனாக கிடைக்கிறது. அந்த யானையில் உலா செல்லும் அவர், தளபதி விஜய்யின் புகைப்படத்திற்கு மாலை அணிவிப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

யோகி பாபு
ராஜபீமா படத்திலும் காமெடியில் யோகி பாபு கலக்குகிறார். ஜாம்பி படத்திற்கு பிறகு மீண்டும் யாஷிகா ஆனந்த் உடன் யோகி பாபு நடித்துள்ளார். டிரைலரில் இடம்பெற்றுள்ள அந்த டிச்சிங் சீன் யோகி பாபு ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











