விஜய் டிவி பிரபலத்துடன் படுநெருக்கமாக அர்ச்சனா..கொஞ்சம் கூட செட் ஆகல.. பொறுமித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் அர்ச்சனா விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் அன்புதான் ஜெயிக்கும் என்று கூறி செமயாய் குரூப்பிஸம் செய்தார். ரியோ, சோம், நிஷா, கேப்பிரியல்லா என சில பிரபலங்களை சேர்த்துக் கொண்டு அன்பு கேங் என தனது ஸ்டைலில் விளையாடினார்.

விளையாடிய அர்ச்சனா

விளையாடிய அர்ச்சனா


குறிப்பாக ஆரியை டார்கெட் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மேலும் மற்ற ஹவுஸ்மேட்டுகளிடமும் ஆரியை வைத்து விளையாடினார். இதனால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் அர்ச்சனா.

வேலையை விட்டுவிட்டு

வேலையை விட்டுவிட்டு

சமூக வலைதளங்களில் அவரை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். ஏற்கனவே ஜீ தமிழில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா அங்கு வேலையை விட்டு விட்டு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

விஜய் டிவி ஆங்கர்

விஜய் டிவி ஆங்கர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு விஜய் டிவியிலேயே ஆங்கராக சேர்ந்து விட்டார் அர்ச்சனா. அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அர்ச்சனா, சில நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கேற்கிறார்.

போட்டோக்கள் ஷேரிங்

போட்டோக்கள் ஷேரிங்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அர்ச்சனா தன்னுடைய போட்டோக்களையும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போட்டோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

மாகாபாவுடன் நிகழ்ச்சி

மாகாபாவுடன் நிகழ்ச்சி

அந்த வகையில் தற்போது மாகாபா ஆனந்துடன் சேர்ந்து இருக்கும் சில போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் அர்ச்சனா. இதன் மூலம் மாகாபாவுடன் சேர்ந்து ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

செட் ஆகவில்லை

செட் ஆகவில்லை

இதனை பார்த்த நெட்டிசன்கள், மாகாபா பிரியங்கா காம்போதான் நல்லாருக்கும். அர்ச்சனாவுடன் கொஞ்சமும் செட் ஆகவில்லை என விளாசி வருகின்றனர். மேலும் அர்ச்சனாவுக்கு இத்தனை நிகழ்ச்சிகள் எல்லாம் வழங்கவே கூடாது என்றும் அதற்கு அவர் தகுதியானர் இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X