பேப்பரும் கையுமாய்.. கண்ணீருடன் ஹவுஸ்மெட்ஸ்.. அழுகை டாஸ்க்கை ஆரம்பித்த பிக்பாஸ்.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க், டெய்லி டாஸ்க், கேப்டன் டாஸ்க், ஃபன் டாஸ்க் என நாள்தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று கடிதம் எழுதும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பேப்பரும் பேனாவுமாய்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹவுஸ்மெட்ஸ் தாங்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நினைக்கும் ஒரு நபருக்கு கடிதம் எழுத சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து ஹவுஸ்மெட்ஸ் பேப்பரும் பேனாவுமாய் தனியாக அமர்ந்து தனது அன்புக்குரியவர்களை நினைத்து கடிதம் எழுதுகின்றனர்.

கண்ணீர் விட்டு அழுது..
சுச்சி, அர்ச்சனா, அனிதா, நிஷா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி, ஷிவானி ஆகியோர் தங்களின் அன்புக்குரிய அந்த ஒரு நபருக்கு கடிதம் எழுதுகின்றனர். அப்போது சம்யுக்தா, அர்ச்சனாவும் கண்ணீர் விட்டு அழுதுக் கொண்டிருக்கின்றனர்.

சோகமயமான பிக்பாஸ் வீடு
இதேபோல் மற்ற ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் தாங்கள் தீபாவளி கொண்டாட நினைக்கும் அந்த நபருக்கு சோக முகத்துடன் கடிதம் எழுதுகின்றனர். இதனால் பிக்பாஸ் வீடே சோக மயமாக காட்சியளிக்கிறது.

இப்படியே ஓட்டி விடாதீர்கள்
இதனை பார்த்த ரசிகர்கள் அடடா திரும்பவும் ஆரம்பித்து விட்டீர்களா, அழாமல் ஒரு நாளை கூட உங்களால் நகர்த்த முடியாதா என கேட்டு வருகின்றனர். மேலும் சிலர் இந்த வாரம் முழுக்க இப்படியே ஓட்டி விடாதீர்கள், சுரேஷ் தாத்தா இல்லாத இந்த நேரத்தில் அழுகாச்சி காட்சிகளை போட்டு எஞ்சியிருக்கும் ரசிகர்களையும் ஓட்டம் பிடிக்க வைத்து விடாதீர்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











