கமல் சார் ட்ரீட் எங்கே? கம்பீர குரலில் மிரட்டிய பிக்பாஸ்.. கமலின் அல்ட்டிமேட் பதில்.. அசத்தல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் இறுதி நாட்களில் தொகுப்பாளர்கள் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பது தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் வாடிக்கையாக உள்ளது.
அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார்.

கமலுக்கு வாழ்த்து
பிக்பாஸை சீசன் 4 பொருத்தவரை இன்றைய எபிசோட் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கறுப்பு உடையில் கலக்கல் என்ட்ரி
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கறுப்பு நிற உடையில் கலக்கலாக என்ட்ரி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

கம்பீர குரலில் வாழ்த்து
வழக்கமான வரவேற்பு இல்லாமல் மின் விளக்குகள் மற்றும் புஸ்வாணங்கள் ஒளிர அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டைல் என்ட்ரி கொடுக்கும் கமலை, இந்த இனிய நாளன்று உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.. ஹேப்பி பர்த்டே கமல் சார்.. என்று கம்பீர குரலில் வாழ்த்து சொல்கிறார் பிக்பாஸ்.

கமல் சார் ட்ரீட் எங்கே?
மேலும் அதே கம்பீரத்துடன் கமல் சார் ட்ரீட் எங்கே என்றும் மிரட்டலாக கேட்கிறார் பிக்பாஸ். அதற்கு ட்ரீட்டா என ஆச்சரியத்துடன் கேட்கும் கமல், நான் எல்லோரையும் சமமாகவும் மரியாதையாகவும் நடத்துவேன்.. அதையே எதிர்பாருங்கள்.. அதுதான் ட்ரீட் என பதில் அளித்து வாயடைக்க வைக்கிறார் கமல்.

ஐ லவ் யூ ஆல் `
தொடர்ந்து அகம் டிவி வழியாக அகத்திற்குள் செல்லும் கமலுக்கு ஹவுஸ்மெட்ஸ் ஆரவாரத்துடன் பிறந்த நாள் வாழ்த்து கூறுகின்றனர். மேலும் தன்னிடம் ஐ லவ் யூ என ஹவுஸ்மேட்ஸ் ஆளுக்கொருவராய் கூற.. ஐ லவ் யூ ஆல் என்று பதிலுக்கு சொல்கிறார் கமல். இப்படியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ.


Click it and Unblock the Notifications











