twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோபம் வர்ரது இயல்புதான்.. நாம ஒன்னும் ரோபோ இல்ல.. பாலாஜி போட்ட டிவிட்.. யாருக்கு தெரியுமா?!

    |

    சென்னை: கோபப்படாமல் இருக்க நாம் ஒன்றும் ரோபோட்ஸ் இல்லை என பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் பாலாஜி முருகதாஸ். பல ஆணழகன் பட்டங்களை வென்ற போதும் தன்னை மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    பிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள் பிரஜின் குட்டீஸ்களா இது.. எவ்வளோ அழகு.. திரண்டு வந்த ரசிகர்கள்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதையும் ஒருவர் பேசுவதை மற்றொருவரிடம் போட்டுக் கொடுத்து குளிர்காய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் பாலாஜி.

    அடிக்க பாய்ந்த பாலாஜி

    அடிக்க பாய்ந்த பாலாஜி

    குறிப்பாக ஆரி வின்னர் ஆகக்கூடாது என்பதற்காக அவரை எந்தளவுக்கு டேமெஜ் செய்ய முடியுமோ அந்தளவுக்கு டேமேஜ் செய்தார் பாலாஜி முருகதாஸ். ஆரியை அவன் இவன், போயா வாயா என்று பேசியதோடு அடிக்கவும் பாய்ந்தார்.

    ஏ சர்டிஃபிகேட் கொடுங்கள்

    ஏ சர்டிஃபிகேட் கொடுங்கள்

    பாலாஜியால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டது. பாலாஜி படுத்தியபாட்டால் பலரும் பிக்பாஸ் பார்ப்பதையே தவிர்த்தனர். பிரபலங்கள் சிலர் பாலாஜியை வெளியே அனுப்புங்கள் அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏ சர்டிஃபிகேட் கொடுங்கள் என்று கூறினர்.

    பாலாஜியின் டிவிட்

    பாலாஜியின் டிவிட்

    அந்தளவுக்கு கோபப்பட்டு பிக்பாஸ் பார்த்தவர்களின் பிபியை எகிற வைத்தார் பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் பாலாஜி பதிவிட்டுள்ள ஒரு டிவிட் பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

    கோபப்படுவது சரிதான்

    கோபப்படுவது சரிதான்

    அதாவது நாம் மனிதர்கள், ரோபோக்கள் அல்ல ஆகையால் சில நேரம் கோபப்படுவது சரிதான் என்றும் டார்ச் லைட் என்றும் பதிவிட்டுள்ளார். அண்மையில் தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல், கோபத்தில் கட்சி ஊழியரிடம் டார்ச் லைட்டை தூக்கியடித்து கோபப்பட்டார்.

    அவரும் மனிதர்தான்

    அவரும் மனிதர்தான்

    இந்த வீடியோ வைரலானது. இந்நிலையில் அவர் கோபப்பட்டதில் எந்த தவறும் இல்லை என கமலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் பாலாஜி. பாலாஜியின் பதிவை பார்த்த ஒரு நெட்டிசன் மற்றொருவர் முகத்தில் வீசக்கூடாது, அவரும் மனிதர்தான் ரோபோ அல்ல என்று பதிலளித்தார்.

    ஆரியை சீண்டி

    ஆரியை சீண்டி

    அதற்கும் பதில் கூறிய பாலாஜி, ஆரியை சீண்டும் வகையில் அந்த மனிதர் கமல் சாரை தூண்டிவிடும் வகையில் சோம்பேறி அல்லது வேறு ஏதாவது கூறியிருக்கலாம், அவர் உடைந்த காலுடன் தேர்தலுக்காக இவ்வளவு கடினமாக உழைத்து வரும் நிலையில் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Balaji supports Kamal hassan for lose his temper. He also provoking Aari in his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X