திருட்டு முழியா.. ஓவராய் பேசிய ரியோ.. லிவிங் ஏரியாவில் ஓரங்கட்டிய பிக்பாஸ்.. திணறடிக்கும் அன்சீன்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகி திணறடித்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் அன் சீன் காட்சிகள் விஜய் மியூஸிக் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பபட்டு வருகிறது.
அதற்கான அன்சீன் புரமோக்களும் விஜய் சூப்பர் சேனலின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

திருட்டு முழி
அந்த வகையில் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் ரியோ, 15 பேரும் போயிட்டு வந்துட்டீங்க 15 மூஞ்சிலேயேயும் ஒரு திருட்டு முழி வருது என்கிறார். அதற்கு பதில் சொல்லும் ரம்யா, 15 மூஞ்சா? இருக்குறதே 12 பேர்தான் என்கிறார்.

சோஃபாரல உட்காருங்க
தொடர்ந்து பேசும் ரியோ, 60 நாள் டாஸ்க் குறித்து பேசுகிறார். ரியோ நோண்டி நோண்டி கேட்டதால் கடுப்பாகும் கேபி, பிக்பாஸ் ரியோவ கூட்டிட்டு போங்க பிக்பாஸ் என்கிறார். இதனைக் கேட்ட பிக்பாஸ் உடனடியாக ரியோவை அழைத்து, ரியோ லிவிங் ஏரியாவுக்கு வந்து சோஃபால உட்காருங்க எனகிறார்.

ஏன் எப்போவும் ரியோ?
இதனால் மிரண்டு போகும் ரியோ, பிக்பாஸ் நான் என்ன தப்பு பண்ணேன் என கேட்கிறார். இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த ரசிகர்கள் ஏன் எப்போதுமே அன்சீன் புரமோ ரியோ மற்றும் அன்பு கேங்கை மட்டுமே சுற்றி வருகிறது என கேட்டு வருகின்றனர்.

4 பேர் பாக்கி
பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்ததை தொடர்ந்து போட்டியாளர்களை ஒவ்வொருவராய் ஆக்ட்டிவிட்டு ஏரியாவுக்கு அழைத்த பிக்பாஸ் அவர்களின் பங்களிப்பு குறித்து கேட்டு அசிங்கப்படுத்தினார். இதில் அர்ச்சனா, ரியோ, ஆரி ஆகியோர் இன்னும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











