twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹஸ்க்கி வாய்ஸில்.. ரியோவை ரகசியமாக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ்.. செம ஃபார்ம்ல இருக்காரு போல!

    |

    சென்னை: தூங்கிக் கொண்டிருந்த ரியோவை ஹஸ்க்கி வாய்ஸில் ரகசியமாக அழைத்து கிறங்க செய்தார் பிக்பாஸ்.

    கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் செம ஜாலியாக உள்ளார் பிக்பாஸ். கன்டெஸ்டென்டுகளை கலாய்ப்பது, செல்லமாக அழைப்பது, கேலியாக பேசுவது என கூலாக கொண்டு செல்கிறார்.

    பரத்தின் யாக்கை திரி.. படப்பிடிப்புக்கு பூஜை போட்டாச்சு! பரத்தின் யாக்கை திரி.. படப்பிடிப்புக்கு பூஜை போட்டாச்சு!

    கம்பீரமான குரலில் ஹவுஸ்மேட்ஸை பிக்பாஸ் கலாய்ப்பதை ரசிகர்கள் அப்படி கொண்டாடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரான சாஷோவின் போட்டோ வெளியானது.

    முரட்டு கம்பீர குரலுக்கு

    முரட்டு கம்பீர குரலுக்கு

    இந்த முரட்டு கம்பீர குரலுக்கு சொந்தக்காரர், இத்தனை இளமையானவரா என வாயை பிளந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவிலேயே ரசிகர்களை ஹேப்பியாக்கியுள்ளார் பிக்பாஸ்.

    ஹஸ்க்கி வாய்ஸ்

    ஹஸ்க்கி வாய்ஸ்

    அதவாது இன்றைய முதல் புரமோவில் சோஃபாவில் படுத்து கண்களை மூடியப்படி படுத்துள்ளார் ரியோ. இதனை பார்த்த பிக்பாஸ், ரியோ.. ரியோ ராஜ் என ஹஸ்க்கி வாய்ஸில் ரகசியமாக அழைக்கிறார்.

    ஹஸ்க்கி வாய்ஸில் ரகசியமாக

    ஹஸ்க்கி வாய்ஸில் ரகசியமாக

    இதனைக் கேட்ட ரியோ, திருதிருவென விழித்தப்படியே எழுந்து பார்க்கிறார். அப்போதும் ஹஸ்க்கி வாய்ஸில் ரகசியமாக கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க என்று அழைக்கிறார்.

    பாடலின் பல்லவி

    பாடலின் பல்லவி

    இதனை பார்த்த மொத்த ஹவுஸ்மேட்ஸும் செம குஷியில் பூரித்து போகின்றனர். தொடர்ந்து பாடலின் பல்லவியை பாடும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் பஸரை அழுத்திவிட்டு இசைக்கான பாடலின் பல்லவியை பாட சொல்கிறார்.

    டங்கா மாரி ஊதாரி

    டங்கா மாரி ஊதாரி

    இதில் ஷிவானி நாராயணன், பஸரை அழுத்திவிட்டு டங்கா மாரி ஊதாரி பாடலை பாடுகிறார். அடுத்து ஒளிபரப்பப்படும் இசையை தொடர்ந்து ஓடி வந்து பஸரை அழுத்துகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

    விட்டுக் கொடுக்கவில்லை

    விட்டுக் கொடுக்கவில்லை

    இதில் யார் முதலில் பஸரை அழுத்தியது என்ற குழப்பம் ஏற்பட ஆரி, சோம், ரம்யா ஆகியோர் பின் வாங்குகின்றனர். கேபி, பாலாஜி, ஷிவானி ஆகியோர் மட்டும் நின்று நான்தான் தொட்டேன் என வாதாடி வருகின்றனர்.

    கடுப்பான பாலாஜி

    கடுப்பான பாலாஜி

    யாரும் ஒரு முடிவுக்கு வராததால் கடுப்பான கேபி, யாரும் சொல்ல மாட்டாங்க நான் பாடப்போகிறேன் என்று கூறி ஹார்ட்டுக்குள்ள பச்சைக்குத்தியே பாடலை பாடுகிறார். இதனால் செம கடுப்பாகிறார் பாலாஜி. கேட்டுட்டு பாடு கேபி என்று வெறுப்பை காட்டுகிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது இன்றைய முதல் புரமோ.

    English summary
    Biggboss today's episode first promo has been released. Biggboss calls Rio in husky voice. Gaby raised Balaji's temper in the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X