குக் வித் கோமாளி புகழுடன் பிக்பாஸ் பிரபலங்கள்.. அனிதா சம்பத் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதே!
சென்னை: குக் வித் கோமாளி பிரபலங்களுடன் பிக்பாஸ் பிரபலங்கள் சந்தித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்தி நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

நல்ல வரவேற்பு
முதல் சீசன் பெரும் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து, இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. எதிர்பார்த்தப்படியே இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குடும்பத்தோடு அமர்ந்து குக் வித் கோமாளியை கண்டுகளித்து வருகின்றனர்.

திரை பிரபலங்கள்..
எண்டெர்டெயினிங் என்ற ஒரு விஷயத்தை மட்டுமே குறிக்கோளாய் வைத்து ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.

அனிதா சம்பத் போட்டோக்கள்
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்களும் குக் வித் கோமாளி பிரபலங்களும் ஒன்றாக சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் புகழுடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிறந்தநாள் பார்ட்டி
நடிகை ரேகா தனது பிறந்த நாளை முன்னிட்டு அளித்த பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலங்களும் குக் வித் கோமாளி பிரபலங்களும் பங்கேற்றதாக அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்களில் அனிதா சம்பத்தின் முகம் பளிச்சென தெரிவரை பார்த்த நெட்டிசன்கள், என்ன முகத்தை சுற்றிலும் ஒளிவட்டம் தெரிகிறது என கேட்டு வருகின்றனர்.

பிரபலங்களின் போட்டோஸ்
இதேபோல் சுரேஷ் சக்கரவர்த்தியும் சனம் ஷெட்டி, ரேகா, அனிதா, அனிதாவின் கணவர் பிரபாகரன், புகழ், பாலாஜி, ஷிவானி, கேபி என பலருடனும் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











