பெரும் துயரம்.. பிரார்த்தனைகள்.. பாலாஜியின் தந்தை மறைவுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: பாலாஜி தந்தையின் மறைவுக்கு ஆரி மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான இவர், பிக்பாஸ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆவார்.
இந்நிலையில் பாலாஜியின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதுவும் கடந்து போகும்
பாலாஜியின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் பாலாஜியின் தந்தையும் தற்போது மரணமடைந்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலாஜி, இதுவும் கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார்.

பெரும் துயரம்
பாலாஜியின் தந்தை மறைவிற்கு பிக்பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆரி பதிவிட்டுள்ள டிவிட்டில் பாலாஜியின் தந்தை மறைவை கேட்டு பெரும் துயரமடைந்தேன். இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்திற்கு பலமும் தைரியமும் இருக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

சனம் இரங்கல்
இதேபோல் சனம் ஷெட்டி பதிவிட்டுள்ள டிவிட்டில், பாலாஜி மற்றும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாலா உங்கள் தந்தைக்கு என்னுடைய பிரார்த்தனைகள். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்.. இவ்வாறு சனம் ஷெட்டி பதிவிட்டுள்ளார்.

பாலாஜிக்கு ஆறுதல்
பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா, முகேன், ஆரவ், அனிதா சம்பத் ஆகியோர் தங்களின் தந்தையை இழந்த நிலையில் தற்போது பாலாஜியும் தனது தந்தையை இழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் பாலாஜிக்கு சமூக வலைதள பக்கத்தில் ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











