'ஆளப்போறார் ஆண்டவர்', 'அன்புள்ள அப்பா..' - கமலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் வாழ்த்து!

By Vignesh Selvaraj

சென்னை : நடிகர் கமல்ஹாசன் இன்று தன் 63-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வழக்கம்போல இல்லாமல் இந்த ஆண்டு அவருக்கு இன்னும் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்.

அரசியல் என்ட்ரிக்கு தயாராகும் அவருக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லிவரும் நிலையில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் பாபுஜிக்கு பிறந்தநாள் என வாழ்த்துச் சொல்லி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதேபோல பிக்பாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஹரீஷ் கல்யாண், ஆர்த்தி, கணேஷ், ஆரவ், காயத்ரி, சுஜா, காஜல் என பலரும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

ஆளப்போறார் ஆண்டவர்

'ஒன் அண்ட் ஒன்லி பிக்பாஸ் 'நம்மவர்'! ஆளப்போறார் ஆண்டவர்!' என மகிழ்வுடன் கமலுக்கு வாழ்த்துச் சொல்லியுள்ளார் நடிகை ஆர்த்தி.

இதய நாயகன்

எங்கள் இதய நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அருமையான இந்த நினைவுகள் என்றும் என் நெஞ்சத்தில் குடியிருக்கும் கமல்ஹாசன் சார்! என ஹரிஷ் கமல்ஹாசனுக்கு முத்தம் கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

எங்கள் பிக்பாஸ்

மிகுந்த மகிழ்வுடன் பிறந்தநாள் வாழ்த்துகள் என் குரு கமல்ஹாசன் சார். ஒரு தலைவர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், எங்கள் பிக்பாஸ் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டியாக விளங்கவேண்டும்.

அப்பா நன்றி

'உங்களை அப்பா என்றழைக்கும் அந்த மூன்று சொல் மந்திர பாக்கியத்தை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி - உங்கள் அன்பு மகள் சுஜா வருணி' என உணர்ச்சிகரமாக வாழ்த்துச் சொல்லியுள்ளார் சுஜா.

வயசு குறைஞ்சிக்கிட்டே போகுது

மை டியர் கமல் சார், நீங்க ஒரு டேலன்ட் பேக்கேஜ். உங்களது 60 வயசு தாண்டிடுச்சுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க. இப்போ பார்க்கிறதுக்கு 30+ மாதிரி இருக்கீங்க. உங்களுக்கு மட்டும் மத்தவங்கள்ளுக்கு மாதிரி இல்லாம வயசு குறைஞ்சிக்கிட்டே போகுதுனு நினைக்கிறேன். என பிக்பாஸ் காஜல் தெரிவித்துள்ளார்.

என்னை செதுக்குபவர்

'பிறந்தநாள் வாழ்த்துகள் உலகநாயகன் பத்மஶ்ரீ கமல்ஹாசன் சார். என்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி!' என பிக்பாஸ் வின்னர் ஆரவ் ட்வீட்ச் செய்துள்ளார்.

அரசியல்வாதி

'மிக விரைவில் நீங்கள் பெரிய அரசியல்வாதியாகி, மக்களுக்கு நல்லது செய்வதைப் பார்ப்பேன் எனும் நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரின் சார்பாக அன்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என காயத்ரி ரகுராம் ட்வீட் செய்துள்ளார். சிறுவயதில் கமலுடன் எடுத்த புகைப்படத்தையு பகிர்ந்துள்ளார் காயத்ரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X