இப்போதான் லாஸ்லியா அப்பா.. அதற்குள் அனிதா அப்பாவா.. பிக்பாஸ் பிரபலங்களை ஆட்கொள்ளும் சோகம்!
சென்னை: பிக்பாஸ் லாஸ்லியாவின் அப்பா உயிரிழந்த சோகம் மறைவதற்குள் பிக்பாஸ் அனிதாவின் அப்பா மரணம் அடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா. அதில் அவரது முதல் படமான ஃபிரண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

மரியநேசன் மரணம்
இந்நிலையில் லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் கடந்த நவம்பர் மாதம் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். கனடாவில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து அவர், கடந்த ஆண்டுதான் பிக்பாஸ் மூலம் தனது குடும்பத்தினரை சந்தித்தார்.

ஒருமாதம் கழித்து வந்த உடல்
கனடாவில் தான் தங்கியிருந்த வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த மரியநேசன், தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடல் கிட்டதட்ட ஒரு மாதம் கழித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் கனடாவில் இருந்து இலங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

ஷீரடிக்கு சென்ற சம்பத்..
லாஸ்லியாவின் அப்பா மறைந்த சோகமே இன்னும் மறையாத நிலையில் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான, அனிதாவின் அப்பா சம்பத் திடீரென காலமாகியுள்ளார். கடந்த வியாழக் கிழமை தனது மகனுடன் ஷீரடிக்கு சென்ற அவர், இன்று ரயிலில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

ரயிலில் மாரடைப்பு
இந்நிலையில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் இன்று மாலை பெங்களூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. 2020ஆம் ஆண்டில் தமிழ் திரைத்துறை பல பிரபலங்களையும் பிரபலங்களின் உறவுகளையும் இழந்துள்ளது.

அடுத்தடுத்து மரணம்
அந்த வகையில் அனிதாவின் அப்பாவும் மறைந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார். பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்படும் சோகங்கள் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











