அனிதா தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக்பாஸ் பிரபலங்கள்.. யாரெல்லாம் போனாங்க!

சென்னை: பிக்பாஸ் அனிதாவின் அப்பா மறைவுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Recommended Video

Anitha வின் தந்தைக்கு நடிகை Rekha நேரில் அஞ்சலி- #RIPSampath

சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பலமுறை ஆட்டியூட் காட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்ஷியாலிட்டி காட்டுவதாக கூறி நடிகர் கமல்ஹாசனையே விமர்சித்தார் அனிதா. பலமுறை நெகட்டிவாக சமூக வலைதளங்களில் ட்ரென்டானார்.

அனிதா அப்பா மரணம்

அனிதா அப்பா மரணம்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் அனிதா. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது அப்பா மாரடைப்பால் காலமானார். ஷீரடி சென்றுவிட்டு திரும்பும்போது ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.

அனிதாவுக்கு ஆறுதல்

அனிதாவுக்கு ஆறுதல்

அனிதா தந்தையின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் அனிதாவுக் ஆறுதல் கூறி மீண்டும் அனிதாவை ட்ரென்டாக்கினர்.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாக தனது அப்பாவை சந்தித்து பேசினார் அனிதா. பிக்பாஸில் இருந்து அனிதா வெளியே வந்த பிறகு அவரது அப்பாவை சந்திக்கவில்லை. அவர் ஷீரடி சென்றிருந்ததால் அவரிடம் அனிதா பேசவும் இல்லை. இதனை அறிந்த ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர்.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவுடன் சக போட்டியாளர்களாக பங்கேற்ற அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் அனிதாவின் தந்தை உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் அனிதாவிற்கும் அவர்கள் ஆறுதல் கூறினர்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

இதேபோல் நடிகை சனம் ஷெட்டி, நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் அனிதாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது அப்பாவுக்கு இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் முன்கூட்டியே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்திருப்பேன் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X