ஹேப்பி பர்த்டே பார்ட்னர்.. ஆரிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன பாலாஜி!

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஆரிக்கு பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஆரி அர்ஜூனன். படங்களில் நடித்திருந்த போதும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை ருசிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஆரி. இதில் நேர்மையாக விளையாடியதோடு, மற்ற போட்டியாளர்களிடமும் கண்ணியமாக நடந்து கொண்டார்.

பெயரை கெடுத்து

பெயரை கெடுத்து

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் வரவேற்பையும் பெற்றார் ஆரி. அதேநேரத்தில் பாலாஜி டபுள் கேம் ஆடுவது, பின்னால் பேசுவது, தரக்குறைவாக பேசுவது நடந்து கொள்வது என தனது பெயரை கெடுத்துக் கொண்டார்.

பெரும் கோபம்

பெரும் கோபம்

பாலாஜி ஆரியிடம் போட்ட சண்டையால் பலரும் பிக்பாஸ் பார்ப்பதையே தவிர்க்கும் நிலைக்கு ஆளாயினர். சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்பட்டார் பாலாஜி. குறிப்பாக ஆரியை அடிக்க பாய்ந்தது, மரியாதை இல்லாமல் பேசியது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியது.

ஃபினாலே வாரத்தில் மாற்றம்

ஃபினாலே வாரத்தில் மாற்றம்

ஆரி ஜெயிக்கவே கூடாது என்று பாலாஜி பேசியதும் அவர் மீதான கோபத்தை அதிகரித்தது. ஆனால் பிக்பாஸ் ஃபினாலே வாரத்திலேயே பாலாஜி ஆரியிடம் சமாதான போக்கை கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் பிரபலங்கள்

இந்நிலையில் இன்று ஆரி தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பலரும் ஆரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலங்களும் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முத்தம் கொடுத்த போட்டோஸ்

பாலாஜி முருகதாஸ் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிறந்த நாள் வாழ்த்துகள் பார்ட்னர் ஆரி, இனி வாழ்க்கைல வெற்றி மட்டுமே காண வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் ஆரிக்கு முத்தம் கொடுத்த போட்டோ சண்டை போட்ட போட்டோ என சில போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார் பாலாஜி.

மகிழ்ச்சியாய் இருங்கள்

இதேபோல் ரியோ ராஜூம் ஆரிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆரி! கடவுளின் ஆசிர்வாதம்.. மகிழ்ச்சியாய் இருங்கள்.. சிரித்துக் கொண்டிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

அனிதா சம்பத்

இதேபோல் அனிதா சம்பத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து ஆரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றியான ஆண்டாக அமைய வாழ்த்துகள் என்றும் அனிதா சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

சனம் வீடியோ

சனம் வீடியோ

சனம் ஷெட்டியும் நடிகர் ஆரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, ஆரி மற்றும் அவரது மகள் ரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது பெங்களூரில் இருப்பதால் சென்னைக்கு வந்ததும் ஆரி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதாக கூறியுள்ளார்.

Recommended Video

மிக பெருமையை Feel பண்ணுறேன் | Sanam Shetty Birthday Wishes to Aari Arjunan
குரல் கொடுத்தீர்கள்

குரல் கொடுத்தீர்கள்

பிக்பாஸ் சீசன் 4ல் ஆரியுடன் சக போட்டியாளராக இருந்ததற்கு பெருமைபடுவதாகவும் கூறியுள்ளார் சனம் ஷெட்டி. மேலும் பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போது ஆரி முதல் ஆளாய் குரல் கொடுத்ததையும் குறிப்பிட்டு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X