காதலிக்கு காருக்குள்ளேயே முத்தம்.. ஏர்போர்ட்டிலும் அத்துமீறல்.. பிக்பாஸ் பிரபலத்தின் வைரல் பிக்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் காருக்குள்ளேயே தனது காதலிக்கு முத்தம் கொடுத்த போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

பாலிவுட்டின் பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ராகுல் வைத்யா. 2004- 2005 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்தியன் ஐடால் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள ராகுல் வைத்யா, ஷாதி நம்பர் 1 உள்ளிட்ட பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

ராகுல் வைத்யா ரன்னர்

ராகுல் வைத்யா ரன்னர்

கடந்த ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ரன்னர் அப் ஆனார் ராகுல் வைத்யா.

பிக்பாஸ் வீட்டில் ப்ரபோஸ்

பிக்பாஸ் வீட்டில் ப்ரபோஸ்

இந்நிலையில் ராகுல் வைத்யா, பிரபல டிவி நடிகையும் மாடலுமான திஷா பர்மரை காதலித்து வந்தார். ராகுல் வைத்யா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது காதலர் தினத்தில் அவரை சந்தித்தார் திஷா பர்மர்.

இருவரும் டேட்டிங்

அப்போது அவரிடம் ப்ரபோஸ் செய்து தனது காதலை வெளிப்படுத்தினார் ராகுல் வைத்யா. தொடர்ந்து இருவரும் டேட்டிங்கில் உள்ளனர். இந்நிலையில் ராகுல் வைத்யா, கட்ரான் கே கில்லாடி என்ற டிவி ஸ்டன்ட் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

கேப் டவுனில் படப்பிடிப்பு

இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் நகரில் நடைபெறுகிறது. இதில் ராகுல் வைத்யா, வரும் சூட், திவ்யங்கா திரிபாதி, அர்ஜூன் பிஜ்லானி, நிக்கி தம்போலி, அபினவ் ஷுக்லா உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர்.

காதலியுடன் வந்த ராகுல்

காதலியுடன் வந்த ராகுல்

இதற்காக நேற்றிரவு அவர்கள் அனைவரும் மும்பையில் இருந்து கேப் டவுன் புறப்பட்டனர். அப்போது தனது காதலியான திஷா பர்மருடன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார் ராகுல் வைத்யா.

கட்டியணைத்து முத்தம்

அப்போது காருக்குள்ளேயே தனது காதலிக்கு நெற்றியில் முத்தம் கொடுத்த ராகுல் வைத்யா, விமான நிலையத்திற்குள் செல்லும் முன்பாகவும் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். மேலும் கைகளிலும் முத்தம் கொடுத்தார்.

Recommended Video

பார்த்தா THEATRE ல்ல தான் MALASIYAN'S WAITING | VATHANI KUNASEGARRAN PART -01 | FILMIBEAT TAMIL

வருணும் காதலியுடன்

இந்த போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகின்றன. இதேபோல் நடிகர் வருணும் தனது காதலி திவ்யாவுடன் விமான நிலையத்திற்கு வந்தார். அவர்களும் மாஸ்க்குடன் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X