For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமண நாளை மனைவியுடன் த்ரில்லிங்காய் கொண்டாடும் ரியோ.. வாழ்த்தும் பிரபலங்கள்.. வைரலாகும் போட்டோஸ்!

    |

    சென்னை: பிக்பாஸ் பிரபலமான ரியோ தனது திருமண நாளை த்ரில்லிங்காய் கொண்டாடி வருகிறார்.

    சன் மியூஸிக், விஜய் டிவி என சில தொலைக்காட்சி சேனல்களில் விஜேவாக இருந்தவர் ரியோ ராஜ்.

    எஸ்டிஆர்., என்ன செஞ்சாலும் டிரெண்டிங்கா...சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் ரசிகர்கள் எஸ்டிஆர்., என்ன செஞ்சாலும் டிரெண்டிங்கா...சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பும் ரசிகர்கள்

    தொடர்ந்து சீரியல்களில் நடித்த ரியோ சினிமாவிலும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரியோ.

    கட்டிப்பிடி வைத்தியம்

    கட்டிப்பிடி வைத்தியம்

    இதில் குரூப்பிஸம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு அன்பு கேங்கில் ஐக்கியமானார் ரியோ. மேலும் சக பெண் போட்டியாளர்களை எதற்கெடுத்தாலும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறி வந்தார்.

    குட்டி சினேகன்

    குட்டி சினேகன்

    இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார். ரியோவை கட்டிப்பிடி வைத்தியர் என்றும் குட்டி சினேகன் மற்றும் கோமாளி என்றும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    காட்டுக்கு சென்ற ரியோ

    காட்டுக்கு சென்ற ரியோ

    இந்நிலையில் பிக்பாஸ் முடிந்ததும் காட்டுக்கு போகப் போவதாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே கூறினார். இதனால் கமல் அவருக்கு டென்ட்டை பரிசாக கொடுத்தார். சொன்னது போலவே பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததும் காட்டுக்கு சென்றார் ரியோ.

    மனைவியுடன் செலிபிரேஷன்

    மனைவியுடன் செலிபிரேஷன்

    தனது மனைவி மற்றும் மகளுடன் காட்டில் சுற்றிய போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்தார். இந்நிலையில் தனது மனைவியுடன், கடலில் குளிப்பது, காட்டில் என்ஜாய் செய்வது என சில போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    ஐ லவ் யூ சோ மச்

    ஐ லவ் யூ சோ மச்

    மேலும் ஆம்.. நான் மிகவும் சார்ந்த நபர் தான்.. நீ என் வாழ்க்கையை அழகாக்குகிறாய்.. உன்னை வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என நான் உறுதியளிக்கிறேன் திருமண நாள் வாழ்த்துகள் என தனது மனைவி ஸ்ருதியின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டு ஐ லவ் யூ சோ மச் என்று பதிவிட்டுள்ளார்.

    வாழ்த்து மழை

    வாழ்த்து மழை

    இதனை பார்த்த பிக்பாஸ் பிரபலங்களான ரம்யா பாண்டியன், சம்யுக்தா, கேபிரியல்லா உள்ளிட்டோர் இருவருக்கும் திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரியோவின் ரசிகர்களும் இருவருக்கும் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். ரியோவின் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

    English summary
    Biggboss celebrity Rio Raj celebrates his wedding anniversary with his wife. Rio shared photos with his wife. Fans and other Biggboss celebrities wishes him for his wedding anniversary.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X