என் முதல் காதல் நீங்கள்தான்.. 4வது மனைவியாக ரெடி..பிரபல நடிகருக்கு வலை விரிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: பிரபல நடிகருக்கு நான்காவது மனைவியாக தயார் என பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் பவன் கல்யாண்.

இவரை ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று வாஞ்சையோடு அழைத்து வருகின்றனர். நடிகர் பவன் கல்யான் இதுவரை மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை பிரபலங்கள்

பவன் கல்யாண் நடிகராக மட்டுமின்றி ஸ்க்ரீன் ரைட்டர், ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார். அவருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம்

அந்த வகையில் டைஹார்டு ஃபேன் ஆன பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிகர் பவன் கல்யாணை திருமணம் செய்து கொண்டு நான்காவது மனைவியாக தயார் என கூறியுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் அஷு ரெட்டி.

பவர் ஸ்டாருடன் போட்டோ

பவர் ஸ்டாருடன் போட்டோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டார். பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் பவன் கல்யாணை நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார் அஷு ரெட்டி.

திருமணம் செய்துகொள்வீர்களா?

திருமணம் செய்துகொள்வீர்களா?

இந்நிலையில் அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள அஷு ரெட்டி, நீங்கள் தான் என் முதல் காதல் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், பவன் கல்யாண் உங்களை 4வது மனைவியாக்க வாய்ப்பு கொடுத்தால் ஏற்பீர்களா? என்று கேட்டார்.

நான் ரெடி..

நான் ரெடி..


அதற்கு சற்றும் யோசிக்காத அஷு ரெட்டி, ஏற்றுக்கொள்வேன் என பதில் அளித்துள்ளார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது. பவன் கல்யாண், கடந்த 1997-ம் ஆண்டு நந்தினி என்பவரை முதலில் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பத்து ஆண்டுகள் மட்டுமே அவர்களின் திருமண வாழ்க்கை நீடித்தது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

2007 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பவன் கல்யாண். இதையடுத்து 2009-ம் ஆண்டு 'ஜானி' படத்தில் நடித்த ரேணு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் பவன் கல்யாண். ஆனால் அவருடனும் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

ஆஸ்திரேலிய நடிகை

ஆஸ்திரேலிய நடிகை

பின்னர் அடுத்த ஆண்டே அதாவது 2013ஆம் ஆண்டே ஆஸ்திரேலிய நடிகையான அன்னா லெஸ்னேவாவை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் பவன் கல்யாண். பவன் கல்யாண் தற்போது வரை அவருடன்தான் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமும் ஆன அஷூ ரெட்டி, பவன் கல்யாணுக்கு 4-வது மனைவியாக ரெடி எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X