பிக்பாஸ் போட்டியாளர்கள் கலைஞருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்…!
பிக் பாஸ் போட்டியாளர்கள் கலைஞருக்கு மௌன அஞ்சலி.
Recommended Video

கலைஞருக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் மௌன அஞ்சலி- வீடியோ
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
திமுக தலைவர் மு.கருணாநிதி நேற்று மாலை காலமானார். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் மு.கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அஞ்சலி செலுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் திமுக தலைவரும்,முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி இறந்துவிட்டதனால், அவரின் ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு பிக்பாஸ் அறிவிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications