பிக்பாஸில் ரியோவுக்கு ஒரு நாளைக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா? இணையத்தில் வைரலாகும் சம்பள பட்டியல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆரம்பத்தில் 8 ஆண்கள் 8 பெண்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளரான அர்ச்சனா உள்ளே நுழைந்துள்ளார். இதன் மூலம் பிக்பாஸ் போட்டியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

திரைத்துறை
சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சீசன்களை காட்டிலும் ரொம்பவே விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கிறது. பங்கேற்றுள்ள அனைத்து போட்டியாளர்களுமே திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக உள்ளனர்.

யார் எவிக்ஷன்?
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் இரண்டு வாரங்களை நிறைவு செய்யவுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் எவிக்ஷன் நடைபெறுகிறது. இதனால் நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள 7 பேரில் யார் வெளியேற போகிறார்கள் என்பதை அறிய ஆர்வத்துடன் உள்ளனர் ரசிகர்கள்.

சம்பளம் விவரம்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. போட்டியாளர்களுக்கு நான் ஒன்றுக்கு எவ்ளோ சம்பளம் வழங்கப்படுகிறது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.

ரியோவுக்கு இவ்ளோவா?
அதன்படி ரம்யா பாண்டியன், ஆரி, ஜீத்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தெரிகிறது.

5 பேருக்கு..
அவர்களை தொடர்ந்து சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் வேல்முருகன் ஆயோருக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அந்த பட்டியலின் மூலம் தெரியவந்துள்ளது.
Recommended Video

அனிதாவுக்கு இவ்ளோவா?
மீதமுள்ள போட்டியாளர்களான அனிதா சம்பத், கேப்ரியல்லா சார்ல்டன், சோம் சேகர் மற்றும் ஆஜீத் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அந்த பட்டியலில் தெரியவந்துள்ளது. ஆனாலும் சம்பள தகவல் மிகவும் ரகசியமானது என்பதால் சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்றுதெரியவில்லை.


Click it and Unblock the Notifications











