தப்பா விளையாடிய பாலாஜி.. கடுப்பாகி இடியை இறக்கிய பிக்பாஸ்.. கெஞ்சிய ஆரி.. அதிர்ச்சியில் ஹவுஸ்மெட்ஸ்!

சென்னை: டாஸ்க்கை தப்பா விளையாடிய பாலாஜியால் மொத்த லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்ஸும் அம்பேல் ஆனது.

பிக்பாஸ் வீட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்டி சொல்லி தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான இந்த டாஸ்க்கில் அர்ச்சனா பாட்டியாக இருந்தார்.

சோமுவிடம் இருந்து..

சோமுவிடம் இருந்து..

இதில் பாட்டியை அதிக சந்தோஷப் படுத்துபவர்களுக்கே பாட்டியின் சொத்து என்றி சொல்லியிருந்தார் பிக்பாஸ். ஆனால் இதனை சரியாக புரிந்துகொள்ளாத பாலாஜி, சோவிடம் இருந்த பத்திரத்தை தூக்கி வைத்துக்கொண்டார்.

இறங்கி வரவேயில்லை

இறங்கி வரவேயில்லை

மேலும் அந்த பத்திரத்தை பெறுவதற்காக ஹவுஸ்மெட்டுகள் எவ்வளவோ முயற்சி செய்தும் பாலாஜி கொடுக்க மறுத்துவிட்டார். பாட்டி நேரிடியாக கெஞ்சியும் பாலா இறங்கி வரவேயில்லை.

ட்ரவுசரை கழட்டினால்..

ட்ரவுசரை கழட்டினால்..

இதனால் பாலாஜியின் ட்ரவுசரை கழட்டினால் கூட பரவாயில்லை, பத்திரத்தை மீட்டெடுங்கள் என்று கூறினார் அர்ச்சனா. ஆனால் ரியோ அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் இன்றுடன் முடிந்தது.

முறையா முடிக்க தவறிட்டீங்க

முறையா முடிக்க தவறிட்டீங்க

இதுதொடர்பாக இன்றைய எபிசோடில் பேசிய பிக்பாஸ், பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில், பாட்டியை அதிகமாக சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் தவறான பாதையில் பயணம் செய்து இந்த டாஸ்க்கை முறையா முடிக்க தவறிட்டீங்க.

இடியை இறக்கிய பிக்பாஸ்

இடியை இறக்கிய பிக்பாஸ்

டாஸ்க்கை முறையாக முடிக்காததால் லக்ஸரி பட்ஜெட்டில் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என அதிரடியாக இடியை இறக்கினார் பிக்பாஸ். இதனால் அதிர்ச்சியில் உறைந்தனர் ஹவுஸ்மேட்ஸ். அப்போது பேசிய பாலாஜி, பிக்பாஸ் அந்த லாக்கர்லேருந்து நான் எடுக்கல என்றார்.

ப்ளீஸ் பிக்பாஸ்..

ப்ளீஸ் பிக்பாஸ்..

அவருக்கு பதில் அளித்த பிக்பாஸ், நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டிங்க பாலா, முதல்ல டாஸ்க் என்ன என்பதை சரியா புரிஞ்சுக்கிட்டு விளையாடுங்கள் என்றார். தொடர்ந்து, பேசிய அர்ச்சனா, பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் 15 பேரும் கடினமாக உழைத்துள்ளோம் பாதி பாயிண்ட்ஸாவது கொடுங்கள் என்றார்.

மன்னிப்பு கேட்ட ஆரி

மன்னிப்பு கேட்ட ஆரி

தொடர்ந்து பேசிய ஆரி வீட்டின் கேப்டன் என்ற முறையில் பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். பாலாஜி வேண்டுமென்று அப்படி செய்யவில்லை புரியாமல் செய்துவிட்டார். தயவு செய்து லக்ஸரி மதிப்பெண்களில் பாதிக்கு பாதியாவது கொடுத்து கருணைக் காட்டுங்கள் என்று கெஞ்சினார்.

இறங்கி வராத பிக்பாஸ்

இறங்கி வராத பிக்பாஸ்

பாலாஜியும் தான் புரிந்து கொள்ளாமல் செய்துவிட்டதாக பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டார். இனிமேல் தான் புரிந்து நடந்து கொள்வேன் என்றும் உத்தரவாதம் அளித்தார். மேலும் உங்களின் முடிவை ரீகன்ஸிடர் செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார். இருந்த போதும் பிக்பாஸ் இறங்கி வந்ததாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X