அறம் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் பிரபலம்
சென்னை: பிக்பாஸ் டேனி அடுத்ததாக கோபி நயினார் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்தின் மூலம் வெகுவாக பாராட்டுக்களை பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். ஆழ்துளாய்க் கிணறு, தண்ணீர்ப் பஞ்சத்தின் பின்னால் உள்ள அரசியல் என பல விஷயங்கள் இப்படத்தில் பேசப்பட்டது.

அறம் திரைப்படத்தை இயக்க எப்படி பல போராட்டங்களை சந்தித்தாரோ அதேபோல் தன்னுடைய அடுத்த படத்திற்கும் போராட்டங்களை சந்தித்து வந்தார்.
கடந்த ஒரு வருட காலமாக ஹீரோ யாரென்று முடிவாகாமல் போனதால் தள்ளிப் போனது. முதலில் சித்தார்த் நடிப்பதாக இருந்தது, பிறகு ஆர்யா நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. கடைசியில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். அதுவும், இல்லை என்று ஆனது.
இப்படி கதை கேட்டு ஓகே சொன்னவர்கள் சில காரணங்களால் விலகிப்போக, இப்போது நடிகர் ஜெய்யை ஹீரோவாக வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். இந்த தகவலை பிக்பாஸ் டேனி உறுதிபடுத்தியுள்ளார்.
என்னுடைய அடுத்த படம் ஜெய்யுடன் நடிக்கிறேன். அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினார் தான் இயக்குனர். நேற்று படப்பிடிப்பு ஆரம்பமானது. நடிகர் ஜெய்க்கு ஸ்பெஷல் நன்றி! தங்களின் ஆசீர்வாதம் தேவை என ட்வீட் செய்துள்ளார்.
ஜெய் இப்படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பாக்சராக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











