4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்.. காதலன் மீது பிக்பாஸ் ஜூலி பரபரப்பு புகார்!

சென்னை: காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி தனது காதலர் மீது பிக்பாஸ் பிரபலமான ஜூலி போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டார்.

அவரது வீடியோக்கள் பெரும் வைரலானது. இதனால் யார் இந்த ஜூலி என கேட்கும் அளவுக்கு பிரபலமானார்.

ஓவியாவை ஓரம்கட்டி

ஓவியாவை ஓரம்கட்டி

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதில் காயத்ரி, சக்தி, நமீதா ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ஓவியாவை டார்கெட் செய்தார். நடிகை ஓவியாவுக்கு எதிராக பல்வேறு பொய்களை கூறினார். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஓவியாவை பிக்பாஸ் வீட்டில் ஓரம் கட்டினார் ஜூலி.

குறும்படம் போட்ட கமல்

குறும்படம் போட்ட கமல்

இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி கூறிய பொய்களை, குறும்படமாக போட்டு அவரது முகத்திரையை கிழித்தார் கமல்ஹாசன். மேலும் தான் கேமராக்களுக்கு புதிது என கமலிடம் கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி அதற்கு முன்பே குறும்படங்கள் மற்றும் இசை ஆல்பங்களில் நடித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

அம்பலப்படுத்திய கமல்

அம்பலப்படுத்திய கமல்

இதனை கவனித்த கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது, அதையும் கேட்டு ஜூலி கூறிய பொய்களை அம்பலப்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் ஜூலி ஆடிய ஆட்டத்தால் அவர் மீது பார்வையாளர்கள் தாக்குதல் நடத்தி விடக்கூடுமோ என்று அஞ்சிய கமல், அவரை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நடிகையான ஜூலி

நடிகையான ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலியின் பெயர் டேமேஜ் ஆனாலும் சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு மற்றும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. சில படங்களில் சப்போர்ட்டிங் ரோலிலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார் நடிகை ஜூலி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

காதலர் ஏமாற்றிவிட்டார்

காதலர் ஏமாற்றிவிட்டார்

அந்த வகையில் தனது ஆண் நண்பருடன் அவுட்டிங் செல்லும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை ஜூலி போலீஸில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிவிட்டு தற்போது தனது காதலர் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்துள்ளார்.

காதலர் ஏமாற்றி விட்டார்

காதலர் ஏமாற்றி விட்டார்

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது பரபரப்பு புகார் அளித்திருக்கிறார் ஜூலி. மனீஷ் என்பவர் தன்னை 4 வருடங்கள் காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி தன்னிடம் இருந்த நகை பணம் பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டு தன்னை ஏமாற்றி விட்டதாக சொல்லி காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார் ஜூலி.

திருமணம் செய்து கொள்வதாக கூறி..

திருமணம் செய்து கொள்வதாக கூறி..

அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் மணீஷ் என்பவரும் ஜூலியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் இருந்து தங்க நகை இருசக்கர வாகனம் மற்றும் வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் என 2, 30000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பெற்றுள்ளார் மணீஷ்.

Recommended Video

நா பேசிய Career Damage வார்த்தைகள் | Actress Reshma Exclusive part-01 | Filmibeat Tamil
போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு தற்போது மதத்தை காரணம் காட்டி தனது பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று கூறி ஜூலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார் மணீஷ். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஜூலிக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் ஜூலி தனது புகாரில் தெரிவித்துள்ளார். ஜூலி அளித்த புகாரின் அடிப்படையில் மணீஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது ஜூலி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X