லாக்டவுனில் சிக்ஸ்பேக் வைத்த பிக்பாஸ் பிரபலம்.. அப்படியே கடத்தட்டா என கேட்கும் தீவிர ரசிகைகள்!

சென்னை: இந்த லாக்டவுனில் ஹீரோயின்கள் மட்டுமின்றி ஹீரோக்களும் கடுமையாக வொர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக்கும் வைத்து வருகின்றனர்.

தளபதி விஜய்யின் ஜில்லா, தல அஜித்தின் வீரம் படங்களில் நடித்த நடிகர் மகத், தற்போது தனது ஹாட்டான சிக்ஸ் பேக் பாடியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் இரண்டாம் சீசனில் சாக்லேட் பாயாக இருந்த மகத்தை இப்படியொரு லுக்கில் பார்த்த அவரது ரசிகைகள் வாயை பிளந்து 'வாவ்' சொல்லி வருகின்றனர்.

சிம்புவின் நண்பர்

சிம்புவின் நண்பர்

2006ம் ஆண்டு சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் சிம்புவின் நண்பனாக சினிமாவுக்கு அறிமுகமானார் மகத். தொடர்ந்து சிம்புவின் காளை, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் நடித்துள்ள மகத், சிம்புவின் நெருங்கிய நண்பராக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.

இரண்டாம் சீசன்

இரண்டாம் சீசன்

நண்பராகவும், துணை நடிகராகவும் நடித்து வந்த நடிகர் மகத், 2018ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா பங்கேற்ற அந்த சீசனில், யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக பழகி வந்தார் மகத்.

லவ் மேரேஜ்

லவ் மேரேஜ்

பிக்பாஸ் சீசன் முடிந்து வெளியே வந்த மகத்துக்கு சில படங்கள் கையெழுத்தாகின. இந்த ஆண்டு தொடக்கத்தில், தனது நீண்ட நாள் காதலியும் பிரபல மாடல் அழகியுமான பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார். அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்த் உடன் நெருக்கமாக பழகி வந்த நடிகர் மகத், தற்போது உருவாகி வரும் இவன் தான் உத்தமன் படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார். மகேஷ் மற்றும் வெங்கடேஷ் எனும் இரு இயக்குநர்கள் இணைந்து இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அண்மையில் சிம்பு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரையும் விடல

அவரையும் விடல

யாஷிகா ஆனந்த் மட்டுமின்றி அதே பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராகவும் சர்வாதிகாரியாகவும் கலக்கிய நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் "கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா" என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் நம்ம மகத். சிம்புவின் பாடல் வரிகளை தலைப்பாக கொண்டு உருவாகி வரும் அந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபு இயக்கி வருகிறார்.

லாக்டவுன் சிக்ஸ்பேக்

லாக்டவுன் சிக்ஸ்பேக்

புதுசா திருமணம் ஆகி இந்த லாக்டவுனில் தனது மனைவியுடன் வீட்டில் ரொமான்ஸ் செய்து வருவார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென கடின உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்துள்ள தனது பாடியின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களையும், ரசிகைகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் மகத் ராகவேந்திரா.

கடத்தணும்

கடத்தணும்

பொதுவாக பெண்கள் அழகாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டால், தான் அவர்களை அப்படியே கடத்தணும் என சிலர் கமெண்ட் செய்வது வழக்கம். ஆனால், மகத்தின் இந்த சூப்பரான சிக்ஸ் பேக் உடம்பை பார்த்த தனுஷா எனும் பெண் ரசிகை, உங்களை அப்படியே கடத்தணும் என கமெண்ட் செய்துள்ளார். யாஷிகா ஆனந்த் மறக்காம லைக் போட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X