சும்மா அழகு கூடிட்டே போகுது.. க்ரீன் கவுனில் கவர்ச்சி சிலை.. மிரளவிடும் பிக்பாஸ் ரேஷ்மா!

சென்னை: க்ரீன் கவுனில் கவர்ச்சி சிலை போல இருக்கும் ரேஷ்மாவின் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் 'புஷ்பா' கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அந்த பிரபலம் அவரை பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரை கொண்டு வந்து சேர்த்தது.

கவர்ச்சி பொங்க

கவர்ச்சி பொங்க

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் ஆக்டிவான ரேஷ்மா பசுபுலேட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சமீப காலமாக கவர்ச்சி பொங்க பல புதிய போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். வளைத்து வளைத்து ஏகப்பட்ட போட்டோஷூட்களை இந்த லாக்டவுனில் அவர் நடத்த காரணம் ஒன்றும் இல்லாமல் இல்லை.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

2015ம் ஆண்டு வெளியான மசாலா படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த ரேஷ்மா, 2016ம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ‘புஷ்பா' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, கோ 2, மணல் கயிறு, திரைக்கு வராத கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், யோகி பாபுவின் பேய் மாமா, போடா முண்டம், முருங்கக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஹீரோயின்

ஹீரோயின்

மேலும், நடிகர் பிரேம்ஜி நடிப்பில் உருவாகவுள்ள சத்யசோதனை படத்தில் இவர் தான் ஹீரோயின். அந்த வாய்ப்பு கிடைத்தன் காரணமாகத் தான் தற்போது, போட்டோஷூட் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமையும், இணையதள ரசிகர்களையும் கவர்ச்சி கடலில் ஆழ்த்தி வருகிறார் நம்ம புஷ்பா.

பெண்ணுக்கு எதிரி

பெண்ணுக்கு எதிரி

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ரேஷ்மா, தனது ட்விட்டர் பக்கத்தில், பெண்ணுக்கு எதிரி பெண் தான் என பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை பார்த்த பலரும், ஆம், உண்மை தான் என கமெண்ட் செய்தனர். பெண்களுக்கு பெண்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் என்கிற சவால், உலக அளவில் வைரலாகி வரும் நிலையில், ரேஷ்மாவும் அந்த சவாலில் கலந்து கொண்டு, கருப்பு வெள்ளை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சி சிலை

கவர்ச்சி சிலை

இந்நிலையில், நேற்று மாலை க்ரீன் நிற கவுனில் கவர்ச்சி சிலை போல இருக்கும் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு கோலிவுட் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார் ரேஷ்மா. 33 வயதாகும் இந்த ஹாட் புயல் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

கண் கலங்கிய Reshma Sanjana | Sushant Singh is Very Positive Person
லைக் போட்ட ஷெரின்

லைக் போட்ட ஷெரின்

சமீபத்தில் உடல் எடையை குறைத்து சிக்கென ஸ்லிம்மாக மாறியுள்ள நடிகை ஷெரின், தனது பிக்பாஸ் தோழி ரேஷ்மா பதிவிட்டுள்ள இந்த ஹாட் போட்டோவை லைக் செய்துள்ளார். மேலும், பல ரசிகர்களும், சும்மா தூக்கலா இருக்கே, அழகு அள்ளுதே, ஹீரோயின் ஆகிட்டீங்க, கலக்குங்க என்பன போன்ற கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X