என்ன சாக்ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? தழைய தழைய பட்டுப்புடவை.. கழுத்தில் புதுத்தாலி.. பதறும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் மணப்பெண் கோலத்தில் கழுத்தில் தாலியுடன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.
Recommended Video
நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, காலா, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். அதன் பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா
ராய் லக்ஷ்மியுடன் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். இந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக டெடி மற்றும் குட்டி ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்திருந்தார் சாக்ஷி.

அடிக்கடி கலக்கல் போட்டோ
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால் அடிக்கடி கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

வீட்டில் உடற்பயிற்சி
லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் உள்ள சாக்ஷி உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

வித்தியாசமான ஜாக்கெட்
மாடர்ன் டிரெஸ் என்றில்லாமல், விதவிதமான சேலையில் அவ்வப்போது க்யூட்டாக போஸ் கொடுத்து கிறங்க வைக்கிறார். வித்தியாசமான ஜாக்கெட்டுகள் என ரகளை செய்து பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக சேலையிலும் கவர்ச்சி காட்டி திணற வைக்கிறார்.

இது என்ன உடை?
அண்மையில் வித்தியாசமான உடையில் முன்னழகு தெரிய அவர் நடத்திய போட்டோ ஷூட் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அந்த போட்டோவை நெட்டிசன்கள் பலரும் இது என்ன உடை என கழுவி ஊற்றினர்.

புதிய ஆரம்பம்
இந்நிலையில் தழைய தழைய பட்டுப்புடவை, கழுத்து நிறைய நகை, தலையில் பூ, கழுத்தில் புதுத்தாலியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு புதிய லுக், புதிய நாள், புதிய ஆரம்பம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அவ்வளவு அழகு..
பிங்க் நிற சேலையில் நின்றபடியும் உட்கார்ந்தபடியும் கன்னத்தில் கை வைத்தபடியும் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி. அந்த போட்டோக்களில் க்யூட்டாக சிரித்தபடி அவ்வளவு அழகாக உள்ளார் சாக்ஷி.

எங்களால் தாங்க முடியாது
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன சாக்ஷி கல்யாணம் முடிச்சுட்டிங்களா என கேட்டு வருகின்றனர். பலரும் தயவு செய்து இல்லை என்று சொல்லுங்கள், உங்களுக்கு திருமணம் என்றால் எங்களால் தாங்க முடியாது என கூறி வருகின்றனர்.

போட்டோ ஷூட்டா?
அதேநேரத்தில் பலரும் செம க்யூட், அழகு என வர்ணித்து வருகின்றனர். சிலர் என்ன ஆச்சரியம்.. தமிழ் பாரம்பரிய பெண்ணாக மாறி விட்டீர்களா? என்று கேட்டுள்ளனர். மேலும் கழுத்தில் இருப்பது உண்மைத் தாலியா அல்லது போட்டோ ஷூட்டுக்காக போட்டுக் கொண்டீர்களா? சீக்கிரம் சொல்லுங்கள் என்றும் அவசரப்படுத்தி வருகின்றனர்.

உங்கள் கணவர் யார்?
மேலும் உங்கள் கணவர் யார் என்றும் கேட்டு நெட்டிசன்கள் சாக்ஷியை துளைத்தெடுத்து வருகின்றனர். பலரும் ஹேப்பி மேரிட் லைஃப் என்றும் சாக்ஷிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சாக்ஷி கழுத்தில் தாலியுடன் இருக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











