For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உச்சகட்ட சந்தோஷத்தில் பிக்பாஸ் பிரபலம்.. அழகா ஒரு ஆண் குழந்தை பிறந்ததை போட்டோவுடன் போட்டிருக்காரு!

  |

  சென்னை: பிரபல பின்னணி பாடகியும், பிக்பாஸ் பிரபலமும் ஆன ரம்யா என்.எஸ்.கேவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

  Sayyesha Vs Ramya Pandian, Dance Challenge | Classical Vs Western

  கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் பேத்தி தான் இந்த ரம்யா என்.எஸ்.கே. என்பது அனைவரும் ஒன்று தான்.

  குழந்தை பிறந்த சந்தோஷத்தை, தனது கணவன், குழந்தையுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ரம்யா.

  உள்ளாடையுடன்.. பாத்ரூமில் செல்ஃபி.. உதட்டை கடித்தபடி இளைஞர்களை உசுப்பேற்றும் இலங்கை நடிகை!உள்ளாடையுடன்.. பாத்ரூமில் செல்ஃபி.. உதட்டை கடித்தபடி இளைஞர்களை உசுப்பேற்றும் இலங்கை நடிகை!

  என்.எஸ்.கே பேத்தி

  என்.எஸ்.கே பேத்தி

  நகைச்சுவை மன்னர், கலைவாணார் என்ற புகழுக்கெல்லாம் உரியவர் என்.எஸ். கிருஷ்ணன். வில்லுப்பாட்டுக்காரரான அவர், நாடகங்கள் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் எண்ணற்ற பகுத்தறிவு பாடல்களையும், படங்களையும் கொடுத்துள்ளார். அவரது பேத்தி தான் பாடகி ரம்யா என்.எஸ்.கே. என்பது குறிப்பிடத்தக்கது.

  விஜய் ஆண்டனி இசையில்

  விஜய் ஆண்டனி இசையில்

  சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த ரம்யா, ரேடியோ சிட்டியில் ஆர்.ஜே.வாக அறிமுகமானார். 2008ம் ஆண்டு விஜய் ஆண்டனியின் இசையில் பாடகியாக அறிமுகமான இவருக்கு, காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற "உனக்கென நான்" பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது.

  400க்கும் மேற்பட்ட பாடல்கள்

  400க்கும் மேற்பட்ட பாடல்கள்

  நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இடம்பெற்ற "சற்று முன்பு", "சாய்ந்து சாய்ந்து" தல அஜித்தின் ஆரம்பம் படத்தில் "என் ஃப்யூஸ் போச்சு" என பல ஹிட் பாடல்களை பாடியுள்ள ரம்யா என்.எஸ்.கே., தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் 400க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

  சொகுசு சிறை

  சொகுசு சிறை

  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பாடகி ரம்யா என்.எஸ்.கே., சொகுசான சிறையில் வசிப்பது எப்படி என்பதை பார்க்கவே தான் பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததாக சொன்ன ரம்யா, அதிக நாட்கள் அங்கு தாக்குப் பிடிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

  திருமணமும் விவாகரத்தும்

  திருமணமும் விவாகரத்தும்

  கடந்த 2017ம் ஆண்டு அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாடகி ரம்யா. ஆனால், அந்த திருமணம் நீண்ட நாட்கள் நிலைக்காமல், அதே ஆண்டில் விவாகரத்தில் கொண்டு வந்து சேர்த்தது. பின்னர், சீரியல் நடிகரான சத்யாவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

  ஆண் குழந்தை

  ஆண் குழந்தை

  சமீப காலமாக தனது உடல் எடை கூடி வருவதாக பலரும் கூறி வந்தனர். அதற்கான காரணத்தை தான் இப்போது தெரிவிக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரம்யா என்.எஸ்.கே., தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தையையும் ரம்யாவையும் வாழ்த்தி வருகின்றனர்.

  அடுத்த திட்டம்

  அடுத்த திட்டம்

  மேலும், தனது உடல் எடையை பழையபடி குறைக்கும் நடவடிக்கையிலும் தான், இனி இறங்கப் போவதாகவும், அதற்கு தனது குடும்பம் உறுதுணையாக இருப்பதாகவும் பாடகி ரம்யா என்.எஸ்.கே தனது நீண்ட இன்ஸ்டாகிராம் பதிவில் கூறி இருக்கிறார். பிக்பாஸ் பிரபலம் ரம்யாவுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்த பிரபலங்களும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்தி வருகின்றனர்.

  English summary
  Playback singer Ramya NSK and actor Sathya welcomed a baby boy recently. She took to Instagram to share the news with the world.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X