பாரதிராஜா மாதிரி இருக்கீங்க.. சின்ன வயசு சுரேஷ் தாத்தாவை பார்த்து கன்ஃபியூஸ் ஆகும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தியின் இளவயது போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ள சுரேஷ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
சமையல் கலை வல்லுநரான சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சக்ஸ் கிச்சன் என்ற யூட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் மூத்தவர்
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே வயதில் மூத்தவராக இருந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கேபியை தோளில் சுமந்து
ஆனால் இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார். ஒவ்வொரு டாஸ்க்கையும் என்ஜாய் செய்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. அனிதா சம்பத்துடன் சேர்ந்து சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடியது, கேபியை கேப்டனாக்க தோளில் சுமந்தது போன்றவை பெரிதும் ரசிக்கப்பட்டன.

செம ஆக்ட்டிவ்
பிக்பாஸை தொடர்ந்து வெளியேயும் ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை சுரேஷ் தாத்தா என்றே அழைத்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு சமூக வலைதளங்களில் செம ஆக்ட்டிவ் ஆகிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

பிக்பாஸ் ஜோடிகள்
அவ்வப்போது தனது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சுரேஷ் சக்கரவர்த்தி வனிதாவுடன் இணைந்து நடனமாடினார்.

சுரேஷ் தாத்தா இளம்வயதில்
பிக்பாஸ் ஜோடிகள் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி ஷேர் செய்துள்ள இளம் வயது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாரதிராஜா சார் போன்று
அந்த போட்டோவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கார்டன் போன்ற ஏரியாவில் செல்லப்பிராணியான நாயுடன் அமர்ந்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி. அந்த போட்டோரவ பார்த்த நெட்டிசன்கள், பாரதிராஜா சார் போன்று இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.
Recommended Video

வாட் எ மேன் தாத்தா..
மற்றொரு பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ், வாட் எ மேன் தாத்தா என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தி தமிழில் மம்முட்டி நடிப்பில் வெளியான அழகன் படத்தில் அதிராம்பட்டினம் சொக்கு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











