சுஜா வருணி அம்மா ஆயிட்டாங்க.. ஆண் குழந்தை பிறந்திருக்கு! போட்டோ வெளியிட்டு அசத்தல்!
Recommended Video
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளான நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பள்ளிக்கூடம், கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை சுஜா வருணி. இவர் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா வெளியேறியப் பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே பங்கேற்றார்.
இதன் மூலம் பெரும் பிரபலமானார் நடிகை சுஜா வருணி. இவர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

சிவகுமார்- சுஜாவருணி
இதைத்தொடர்ந்து சிவகுமார், சுஜா வருணியின் திருமணம் சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

போட்டோக்கள்
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுஜாவருணி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதுதொடர்பாக ஸ்பெஷல் போட்டோ ஷுட் நடத்தி தனது வயிற்றில் குழந்தை இருக்கும் போட்டோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

டிவிட்டரில் தகவல்
கடந்த 19ஆம் தேதி சுஜா வருணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அவரது கணவர் சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆண் குழந்தை
இந்நிலையில் சுஜா வருணிக்கு கடந்த 21ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலையும் அவரது கணவர் சிவகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிம்பா வந்தாச்சு
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் சிவக்குமார், இறுதியாக ஆண் குழந்தை. என் பையன் சிம்பா வந்தாச்சு. விரைவில் உங்களை சந்திப்பான். ஆகஸ்ட் 21-ம் தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். நான் நடித்த ஃபிங்கர்டிப் என்ற வெப் சீரிஸும் இந்த நாளில் தான் ரிலீஸ். என் மகனும் இந்த பூமிக்கு வந்த நாள்" என்று கூறியுள்ளார்.
குழந்தையின் போட்டோ
இந்நிலையில் நடிகை சுஜாவருணி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது குழந்தை, கணவர் சிவக்குமார் மற்றும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி தெரிவித்துள்ள சுஜா, அவரால் பிரசவம் பார்க்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்றும் பதிவிட்டுள்ளார்.

உண்மையிலேயே
மேலும் அவர்தான் சிறந்த மருத்துவர் என்றும் இப்படி ஒரு மருத்துவரை தனது வாழ்நாளில் தான் சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார் சுஜா வருணி. ஒரு டாக்டராக மட்டுமல்லாமல், அவர் ஒரு தாயாக மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார், எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்னுடைய குழந்தை அவரது கைகளால் உலகத்தைப் பார்க்க அழைத்து வரப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பாக்கியசாலிதான் என்றும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் சுஜா வருணி.

ரசிகர்கள் வாழ்த்து
சுஜா வருணியின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள், தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர். சுஜா வருணியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் - நிஷா தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. கணேஷ் வெங்கட்ராம் குடும்பத்தினரும் சுஜா வருணி குடும்பத்தினரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











