5 நாள்தான் இருக்கு.. இவர்கள்தான் பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்களா? லீக்கான இறுதிப்பட்டியல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் ஃபைனல் லிஸ்ட் என ஒரு பட்டியல் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் 4ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்குகிறது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் நிகழ்ச்சி குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வரிசையாக புரமோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மற்ற மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போதே, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுக்கள் அடிபட தொடங்கிவிட்டன. அதோடு பிக்பாஸ் வீட்டிற்கு போகப் போகும் பிரபலங்கள் யார் என்பது குறித்த பட்டியலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேசும் வரை பேசட்டும்

பேசும் வரை பேசட்டும்

பல முன்னணி சினிமா நடிகைகள், டிவி நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டன. அதேபோல் பல இளம் நடிகர்கள் மற்றும் மாடல்களின் பெயர்களும் அடிபட்டு வந்தது. ஆனால் இதில் பெரும்பாலான பிரபலங்கள், பெயர் அடிபடும் வரை படட்டும். மக்கள் பேசும் வரை பேசட்டும் என காத்திருந்தனர்.

 சாவகாசமாய் அறிவிப்பு

சாவகாசமாய் அறிவிப்பு

அப்போதே சில நடிகைகள் தாங்கள் பங்கேற்க போவதில்லை என பொட்டில் அடித்தார் போல் மறுத்தனர். ஆனால் சில நடிகைகள், கடைசி நேரத்தில்தான் நான் பங்கேற்க போவதில்லை என மறுப்பு தெரிவித்து சாவகாசமாக தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நிகழ்ச்சிக்கு தேர்வான போட்டியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இறுதி பட்டியல்

இறுதி பட்டியல்

அதேபோல் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பிரபலங்களின் போட்டோக்களும் கசிந்தது அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் என பிரபலங்களின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்று வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

ஏற்கனவே வெளியான பட்டியலில் இடம்பெற்ற நடிகை சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதில் புதிதாக தற்போது விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷா இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மாடல் சோம்சேகர்

மாடல் சோம்சேகர்

பெண் போட்டியாளர்கள் தவிர ஆண் போட்டியாளர்களாக பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், ,நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

வைரலாகும் லிஸ்ட்

வைரலாகும் லிஸ்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இதுதான் என வைரலாகி வருகிறது. மேலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு வைல்டு கார்டு என்ட்ரியாக மேலும் சில முக்கிய பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X