பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போகும் 16 போட்டியாளர்கள் இவர்கள்தான்? இணையத்தில் லீக்கான போட்டோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 16 போட்டியாளர்களின் போட்டோ இணையத்தில் லீக்காகி உள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் தொடங்கப்பட்டது.

தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது.

வரும் 3 ஆம் தேதி முதல்

வரும் 3 ஆம் தேதி முதல்

நான்கு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சின்னத்திரையின் ஹிட் ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

புரமோக்களுக்கு வரவேற்பு

புரமோக்களுக்கு வரவேற்பு

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான புரமோக்கள் வெளியாகி வருகிறது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் புரமோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியான வண்ணம் உள்ளன.

Recommended Video

BIGG BOSS ஐ விட என் குடும்பம்தான் முக்கியம் | GP Muthu Exclusive interview | Filmibeat Tamil
போட்டியாளர்கள் குறித்த தகவல்

போட்டியாளர்கள் குறித்த தகவல்

நிகழ்ச்சி தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது நிகழ்ச்சி குழு. இருப்பினும் கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அரசல்புரசலாய் வெளியான வண்ணம் உள்ளன.

16 போட்டியாளர்களின் போட்டோக்கள்

16 போட்டியாளர்களின் போட்டோக்கள்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போட்டியாளர்களின் போட்டோக்களும் லீக்கானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 போட்டியாளர்களின் போட்டோக்கள் என ஒரு சிஜி போட்டோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் சாம் விஷால்

சூப்பர் சிங்கர் சாம் விஷால்

அதில் சூப்பர் சிங்கர் சீசன் 7ல் பங்கேற்ற பாடகர் சாம் விஷால், சீரியல் நடிகை பாவனி ரெட்டி, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளான திருநங்கை மிலா ஆகியோரின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான்

மேலும் பிரபல மாடலும் நடிகருமான கோபிநாத் ரவி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சுனிதா, மலேசிய மாடல் அழகியான நதியா சங், பிரபல நடிகரான மன்சூர் அலிகான் உள்ளிட்டோரின் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.

டிக்டாக் பிரபலம் காய்த்ரி ஷான்

டிக்டாக் பிரபலம் காய்த்ரி ஷான்

டிக்டாக் பிரபலமும் நடிகையுமான காயத்ரி ஷான், கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக வருவார் என கூறப்பட்ட பிரபல சீரியல் நடிகர் அஸீம் கான், மைனா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சூசன், நடிகர் இமான் அண்ணாச்சி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றுள்து.

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி

சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி

இதேபோல் நடிகை பிரதனி ஷர்வா, டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து, நடிகை பிரியா ராமன், சன்டிவியின் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகர் ஆகியோரின் படங்களும் பிக்பாஸ் சிஜி போட்டோவில் இடம் பெற்றுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்

ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும்

ஆனால் பிக்பாஸில் பங்கேற்கிறார் என கூறப்பட்ட நடிகை ஷாலு ஷம்முவின் போட்டோ இதில் இடம்பெறவில்லை. மேலும் இந்த போட்டோ எந்தளவுக்கு உண்மையானது என்றும் தெரியவில்லை. இதில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் உண்மையிலேயே செல்வார்களா என்பது வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X