அட பாவிகளா.. இப்படி செல்லக்குட்டி ரம்யா பாண்டியனையும் மூக்கை சிந்த வச்சுட்டீங்ளே.. ஃபீலாகும் ஆர்மி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவுக்கும் பாலாஜிக்கும் சண்டை, பின்னர் செண்டிமென்ட் கண்ணீர் என நிகழ்ச்சி களைக்கட்டியது.

பிக்பாஸ் வீட்டில் தான் கார்னர் செய்யப்படுவதை நினைத்து கார்டன் ஏரியாவில் அமர்ந்து கண் கலங்கினார்.

அர்ச்சனா அலப்பறை

அர்ச்சனா அலப்பறை

பிக்பாஸ் வீட்டில் கெத்துக் காட்டி வந்த பாலா, கண்ணீர் விட்டு அழுதது பார்வையாளர்களையும் கலங்க வைத்தது. அர்ச்சனாவோ பாலாவுடன் சண்டை போட்ட பிறகு ரியோ மற்றும் சோமுவுடன் சேர்ந்து பெட்ரூமில் அமர்ந்து அவரைக் கலாய்த்தார்.

மீண்டும் கண்ணீர்

மீண்டும் கண்ணீர்

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் பாலாவுடன் அம்மா டயலாக்கை பேசி, நீ என் குழந்தையாக எனக்கு வேணும்டா என்று உருக்கமாக பேசி கலங்க வைத்தார். அவரது பேச்சைக் கேட்ட பாலா மன்னிப்பு கேட்டு அர்ச்சனாவை கட்டியணைத்து மீண்டும் கண்ணீர் விட்டார்.

பாலா கதறல்

பாலா கதறல்

அவரை தொடர்ந்து தான் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வதில் அட்வான்டேஜ் எடுக்கக்கூடாது எனக்கூறி சனம் ஷெட்டி கண்ணீர் விட்டார். முன்னதாக நேற்று முன் தினம் எபிசோடில் அனிதா, பாத்ரூம், கன்ஃபெஷன் ரூம் என கிடைத்த இடத்தில் எல்லாம் கதறினார்.

நீங்கா நினைவுகள்

நீங்கா நினைவுகள்

இந்நிலையில் ஏன் ஒவ்வொருத்தராய் அழுகிறீர்கள், மொத்தமாய் கதறுங்கள் என ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதாவது நீங்கா நினைவுகள் என்ற டாஸ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கஃபென்ஷன் ரூமில்

கஃபென்ஷன் ரூமில்

யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்பதையும் அவருடைய நினைவுகளையும் ஒருவர் பின் ஒருவராக பகீர வேண்டும். இந்த அறிவிப்பை கன்ஃபெஷன் ரூமில் படிக்கும் அர்ச்சனா அங்கேயே கண்ணீர் விட்டு கதற தொடங்குகிறார்.

ரம்யா கதறல்

ரம்யா கதறல்

அவரை தொடர்ந்து தனது நீங்கா நினைவு என பேசும் ரம்யா பாண்டியன், அர்ச்சனா ஆரத்தி எடுத்தாங்க. அப்போ எனக்கு டக்குன்னு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு என்று குரல் தழுதழுக்க பேசிய அவர் பின்னர் தொடர்ந்து பேச முடியாமல் முகத்தை மூடிக் கொண்டு கதறுகிறார்.

சம்யுக்தா, சுரேஷ் கதறல்

சம்யுக்தா, சுரேஷ் கதறல்

அடுத்து பேசும் சம்யுக்தா என் கணவர் கார்த்திக்கை பற்றி நான் பேசவே இல்லை. நான் அந்த கார்த்தியை மிஸ் பண்றேன் என எமோஷனல் ஆகிறார். அவரை தொடர்ந்து பேசும் சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜியை பார்க்கும் போதெல்லாம் என் மகன் ஞாபகம் வரும் என்று தொடர்ந்து பேச முடியாமல் குரல் தழுதழுத்து தவிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X