உங்களுக்கு மறுபடியும் வேலை கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.. ஹவுஸ்மேட்ஸ்களை மிரட்டும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வெளியான முதல் புரமோவில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மீண்டும் வேலை கொடுக்கப்போவதாக கூறியுள்ளார் கமல்ஹாசன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். நேற்றைய எபிசோடில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிய கவின், பங்கேற்றார்.
அப்போது தான் வெளியேறியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கினார். மேலும் லாஸ்லியாவிடம் ஒரு வாரம் தானே நன்றாக விளையாடு நான் வெளியே காத்திருக்கிறேன் என்றார்.

நினைத்தால் அது தவறு
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் இந்தவாரம் ஒருவர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று நினைத்தால் அது தவறு என்கிறார் கமல்.

மறுபடியும் வேலை
அப்போது ஷெரின், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்கிறார். அதற்கு அப்படியா என்று கேட்கும் கமல், அப்போ உங்களுக்கு மறுபடியும் வேலை கொடுக்கலாம்னு இருக்கேன் என்கிறார். இப்படியாக முடிகிறது முதல் புரமோ.

தர்ஷன் வெளியேற்றம்
ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடும் சனிக்கிழமையே எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன்தான் வெளியேறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கழுதையை கூட வின்னராக்கி விடும்
இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியையும் நிகழ்ச்சியையும் கழுவி ஊற்றியுள்ளனர். மேலும் விஜய் டிவி நினைத்தால் ஒரு கழுதையை கூட்டிவந்து கூட வின்னராக்கி விடும் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











