பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் இவரா? ஸ்லைடை போட்டு டிவிஸ்ட் வைத்த பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் கேப்டன் டாஸ்க் நடைபெறுவதும் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கில் தோற்றுப் போட்டியாளர்கள் நேரடியாக நாமினேஷன் புராசஸுக்கு நாமினேட் ஆவார்கள் என அறிவிக்கப்பட்டது.

முதல் புரமோ

முதல் புரமோ

இதனால் அனைத்து ஹவுஸ்மேட்டுகளுமே இந்த வார நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

அனைவரும் பங்கேற்பு

அனைவரும் பங்கேற்பு

இதில் பிக்பாஸின் ஸ்டேட்மென்ட்டை படிக்கிறார் ரியோ. அதன்படி இந்த வாரம் நடைபெறும் கேப்டன் டாஸ்க்கில் அனைத்து ஹவுஸ்மேட்டுகளும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

போட்டோக்கள் - கேள்விகள்

போட்டோக்கள் - கேள்விகள்

இதன் தொடர்ச்சியாக ஹவுஸ்மேட்ஸ் ஆக்டிவிட்டி ஏரியாவில் திரள்கிறார்கள். அப்போது அங்குள்ள டிவியில் சில போட்டோக்கள் ஒளிபரப்படுகிறது. அந்த போட்டோக்கள் மறைந்த பின் பிக்பாஸிடமிருந்து அது தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுகிறது.

ஜோடி ஜோடியாக

ஜோடி ஜோடியாக

அதற்கு சரியான பதிலை சொல்லும் போட்டியாளரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஆரி அர்ச்சனா, கேபி ஆஜித, பாலாஜி ஷிவானி, நிஷா சோம் என பலரும் பேர் பேராக மாறி மாறி பங்கேற்கிறார்கள்.

அனிதாவுக்கு வாழ்த்து

அனிதாவுக்கு வாழ்த்து

இதில் பிக்பாஸ் கேட்கும் கேள்விக்கு அனிதா சரியான பதிலை சொன்னதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து இவர்தான் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் என்று கூறுகிறார் பிக்பாஸ். அப்போது ஹவுஸ்மேட்ஸ் அனிதாவை கட்டியணைத்து வாழ்த்து சொல்வதாக காட்டப்படுகிறது.

எடிட்டரின் கைவண்ணமா?

எடிட்டரின் கைவண்ணமா?

உண்மையிலேயே அனிதா தான் பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனான? அல்லது வழக்கம் போல எடிட்டரின் கைவண்ணம்மா என்பது இன்றைய எபிசோடில்தான் தெரியவரும். அனிதா இந்த வாரம் கேப்டன் ஆனால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X