கடைசியில இதுவும் அபிஷேக் பிளானா இருக்கப்போகுது.. பிக்பாஸ் புரமோவால் பீதியாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கடைசியில் இதுவும் அபிஷேக்கின் பிளானாக இருக்கப்போகிறது என டவுட்டாகி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ரெட் டிவி சேனல், ப்ளூ டிவி சேனல் என ஹவுஸ் மேட்ஸ் இரண்டு அணிகளாக பிரிந்துள்ளனர்.
இதில் அபிஷேக், பிரியங்கா, நிரூப், வருண், சிபி மற்றும் அபினய் ஆகியோர் ரெட் டிவி அணியாக உள்ளனர். இமான் அண்ணாச்சி, ராஜு, தாமரை, அக்ஷரா, பாவனி, அமீர் ஆகியோர் ப்ளூ டிவி அணியாக உள்ளனர்.

வெறுப்பேற்றும் ரெட் டிவி
கடந்த இரண்டு நாட்களாக நடைபெறும் இந்த டாஸ்க்கில் ரெட் டிவி அணியினர் எதிரணியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும் வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ப்ளூ டிவி அணியினர் நகைச்சுவையாக நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

சிபிக்கு பிடிக்கவில்லை
ரெட் அணியில் சிபி மற்றும் நிரூப்பின் உடன்பாடு இல்லாமலேயே சில கான்செப்ட்டுகளை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த டீம்முக்குள் பனிப்போர் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் ரெட் டிவி அணியினர் நடத்தும் நிகழ்ச்சி அந்த அணியில் உள்ள சிபிக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது.

ஸ்க்ரிப்ட் பேப்பரை கிழித்து
இதனால் பங்கேற்றிருப்பவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார் சிபி. அதனை விரும்பாத அபிஷேக் விளம்பர இடைவேளை விடுகிறார். இதனால் கடுப்பாகும் சிபி எல்லா நேரமும் இடைவேளை விட முடியாது என கூறி கையில் உள்ள ஸ்க்ரிப்ட் பேப்பரை தூக்கி எறிந்தும் கிழித்தெறிந்தும் வாக் அவுட் செய்கிறார்.

கடுப்பான சஞ்சீவ்
இதனால் பிக்பாஸ் வீடே களேபரமாகிறது. அப்போது நடக்கும் வாக்குவாதத்தை தவிர்க்கும் வகையில் சஞ்சீவ், சைலன்ஸ் சைலன்ஸ் என கத்துகிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 4 பேர் தப்பு பண்ணாலும் ஒருத்தன் நேர்மையா இருப்பான்.
அந்த ஒருத்தன் சிபி... இஷ்டத்துக்கு அராஜகமா AD போடறது.. பேச விடாம தடுக்கிறது... நல்லா அரசியல் பண்றீங்க பிரியங்கா மற்றும் அபிஷேக்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

யாருன்னு எங்களுக்கு தெரியும்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எல்லாரும் சிபி தான் சைலண்ட்ஸ்னு கத்தினதாக நினைக்கனும் அது தானே.. உன் பிளான் எடிட்டர்.. ஆனா கத்தினது.. சஞ்சீவ்னு எங்களுக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

தாமரைக்கு சப்போர்ட்
இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள், தாமரை செல்வி எதுவும் பண்ணாம இருந்தாலே போதும்.. பிரியங்கா பண்ணுற கேவலமான ஸ்ட்ரேடர்ஜி பாத்து தானாவே ஆடியன்ஸ் தாமரைக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க... என பதிவிட்டுள்ளார்.

நல்லா என்ஜாய் பண்ணுங்க
இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அப்பாடா நல்லா அடிச்சுக்கோங்கடா... சந்தோஷமா இருக்கு... இதைத்தானடா ராஜுக்கிட்ட எதிர் பார்த்தீங்க... நல்லா என்ஜாய் பண்ணுங்க ஃபைட்ட.. என பதிவிட்டுள்ளார்.

இதுவும் ஸ்க்ரிப்ட்டா இருக்கப்போகுது
இன்றைய முதல் புரமோவுக்கு குவியும் கமெண்ட்டுகளை பார்த்த இந்த நெட்டிசன், எம்மா இரும்மா... அது கடைசியில ஸ்க்ரிப்ட்டடா இருக்க போகுது.. இந்த அபிஷேக் இருக்கானே சரியான மீடியாக்காரன்... எபிசோட் பார்த்தாதான் கமெண்ட் சொல்ல முடியும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











