முதல் புரமோவே ரணகளமா இருக்கே.. ஆரியை டென்ஷனாக்கிய ஹவுஸ்மேட்ஸ்.. நாமினேஷன்ல எத்தனை பேரு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ரணகளமாய் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம்தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றும் பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

வழக்கமாக நாமினேஷன்
வழக்கமாக கன்ஃபெஷன் ரூமில் ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்வதும் காரணத்தை கூறுவதும்தான் புரமோவில் இடம்பெறும். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக உள்ளது புரமோ. புரமோவில் இடம்பெற்றிருப்பதாவது, லிவிங் ஏரியாவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அமர்ந்திருக்க பேச செல்கிறார் ஆரி.

அமைதிப்படுத்திய அனிதா
அப்போது சனம் ஷெட்டி ஒரு நிமிடத்துக்குள் வந்து விடுவார் என்று கூறுகிறார். அவரை அருகில் அமர்ந்திருக்கும் அனிதா தட்டி அமைதிப்படுத்துகிறார். இதனை தொடர்ந்து பேசும் ஆரி, நீங்கள் யாருமே இங்க பேசுறதில்லையா என்று கேட்கிறார்.

கடுப்பாகும் ஆரி
அதற்கு ஜித்தன் ரமேஷ், ஓகே ஓகே என்று குனிந்தப்படியே சொல்கிறார். இதனால் கடுப்பாகும் ஆரி, அதை கிரிட்டிசைஸ் பண்ணாதீங்க என்று கூறுகிறார். தொடர்ந்து நாமினேஷன் புராசஸ் நடைபெறுகிறது.

நாமினேஷன் லிஸ்ட்
அப்போது கன்ஃபெஷன் ரூமில் அமர்ந்திருக்கும் ஆரி, தலையை சொரிந்தப்படியே பயங்கர கோபத்துல இருக்கேன் நான் என்கிறார். தொடர்ந்து நாமினேஷன் லிஸ்ட்டை வாசிக்கும் பிக்பாஸ் அதற்கான காரணத்தையும் சொல்லி கடந்த வாரத்தை போல கொளுத்தி போடுகிறார்.

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி
சேஃப் கேம் ஆடுறாங்க, ரூல்ஸ பிரேக் பண்றது, ராஜா வீட்டு கண்ணுக்குட்டியா எந்த வேலையும் செய்யாமல் இருக்குறாங்க போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா என பட்டியலை கூறுகிறார்.

இன்னும் நீளும் போல
புரமோவில் கூறப்படுவதின்படி மொத்தம் 7 பேர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்த பட்டியல் இன்னும் நீளும் என தெரிகிறது. இதனிடையே புரமோவில் இறுதியாக பேசும் ஆரி, ஒரே ஒரு விஷயம் சொல்லிக்கிறேன் என்கிறார்.

ஏதோ பிரச்சனை
அப்போது எழுந்து செல்லும் போட்டியாளர்கள் அனைவரும் அங்கங்கு நின்றப்படி அப்படியே திரும்பி பார்க்கின்றனர். இந்த புரமோவின்படி பிக்பாஸ் வீட்டில் ஏதோ பிரச்சனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆரியை டென்ஷன் ஆக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.


Click it and Unblock the Notifications











