வந்த உடனே அர்ச்சனாவுக்கு ஆப்பு வைத்த சுச்சி.. நாமினேஷனுக்கு சொன்ன காரணத்த பாருங்க!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டின் நாமினேஷன் புராசஸ் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்றைய முதல் புரமோ பிக்பாஸ் வீட்டின் நாமினேஷனை அடிப்படையாக கொண்டுள்ளது.

நாமினேஷன்
அந்த வகையில் பெரும்பாலான ஹவுஸ்மேட்டுகள் ஆரியையும் அர்ச்சனாவையுமே நாமினேட் செய்கிறார்கள். அதன்படி ஆரியை அர்ச்சனா, பாலாஜி, ஷிவானி, சோம் சேகர், சம்யுக்தா ஆகியோர் நாமினேட் செய்கின்றனர்.

வாயை மட்டுமே நம்பி
ஆரியை நாமினேட் செய்யும் பாலாஜி, அவர் வாயை மட்டுமே நம்பி வந்த ஒரு ஆள் மாதிரி இருப்பதாக கூறுகிறார். அடுத்த அர்ச்சனாவை ஆரியும் அனிதாவும் நாமினேட் செய்வது புரமோவில் தெரிகிறது.

அனிதா நாமினேஷன்
ஆரி, அர்ச்சனா ஒரு சார்பாக நடந்துகொள்வதாக காரணம் கூறுகிறார். இதேபோல், அர்ச்சனாவை நாமினேட் செய்யும் அனிதா, பழைய அர்ச்சனா அக்கா இப்போது இல்லை என தெரிகிறது என கூறியுள்ளார்.

சுச்சி நாமினேஷன்
கடைசியாக ஒருவரை நாமினேட் செய்யும் சுசித்ராவும் அர்ச்சனாவின் பெயரையே கூறுகிறார். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் டாமினேட் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என கூறி அவரது பெயரை கூறுகிறார் சுச்சி.

பாலாஜியும் இடம்பெறலாம்
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் பிக்பாஸ் வீட்டின் பெரிய தலைகள் இடம்பிடித்துள்ளன. ஆரி, அர்ச்சனா ஆகியோர் உறுதியாகியுள்ள நிலையில் பாலாஜியும் இந்த வார நாமினேஷனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











