காலையிலேயே ஆரம்பிச்சுட்டாங்கப்பா.. என்னா ரொமான்ஸ்.. மாட்டிக்கிட்டீயேம்மா மாட்டிக்கிட்டீயே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸுக்கும் ஷிவானி நாராயணனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
எப்போதும் பாலாஜியையே பூனைக்குட்டி போல சுற்றி சுற்றி வருகிறார் ஷிவானி.

ஒரே பெட்டில்..
நேற்றைய எபிசோடில் பாலாஜிக்கு ஊட்டிவிட்டார். அவரை மடியில் படுக்க வைத்து மசாஜ் செய்து விட்டார். தொடர்ந்து இருவரும் யாருக்குமே கேட்காததுபோல் பேசிக் கொள்வது, கண்களாயே பேசிக் கொள்வது, ஒரே பெட்டில் நெருக்கமாக அமர்ந்து ரொமான்ஸ் செய்துவது என இருந்து வருகின்றனர்.

முதல் புரமோ
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதிலும் முழுக்க முழுக்க பாலாஜியும் ஷிவானியும் மட்டுமே ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த ஹவுஸ்மேட்ஸும் அந்தாக்ஷரி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

பாலாஜி படுத்திருக்க..
ஆனால் பாலாஜியும் ஷிவானியும் எதிலும் கலந்து கொள்ளாமல் பெட்டில் அமர்ந்து ரொமான்ஸ் செய்கின்றனர்.
இதனை ஹவுஸ்மேட்ஸும் கவனிக்கின்றனர். பாலாஜி படுத்திருக்க அவரது அருகில் அமர்ந்து எதையோ பேசி சிரிக்கிறார் ஷிவானி.
Recommended Video

லுசு பெண்ணே லூசு பெண்ணே..
அவர்களின் ரொமான்ஸுக்கு ஏற்றவாரே ஹவுஸ்மேட்ஸ் மன்மதராச பாடலையும் லூசுப்பெண்ணே பாடலையும் பாடுகின்றனர். இப்படியாக உள்ளது பிக்பாஸின் முதல் புரமோ. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் வேற சம்பவமே நடக்கவில்லையா, இதையெல்லாம் பார்க்க எரிச்சலாக உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











