வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் விளையாடிய விதத்தின் அடிப்படையில் ஒரு விருது வழங்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது. இதில் ஃபைனலிஸ்ட்டுகளாக 5 பேர் இருந்த நிலையில் சோம சேகர் முதல் நபராய் எவிக்ட்டானார்.

அவரை கடந்த சீசனின் டைட்டில் வின்னரான முகென் ராவ் அழைத்து வந்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது.

ட்ரென்ட் செட்டர் சுரேஷ்

ட்ரென்ட் செட்டர் சுரேஷ்

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ட்ரென்ட் செட்டர் விருது கொடுக்கப்பட்டது. இளைஞர்களுடன் போட்டி போட்டு விளையாடியதால் தனக்கு அந்த விருது வழங்கப்பட்டதாக கூறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. அடுத்தப்படியாக கேபிக்கு ஸ்போர்ட்டிவ் என்ற விருது கொடுக்கப்பட்டது. இதனை பார்த்த கமல் கேபியிடம் இருந்த தன்னம்பிக்கை தனக்கு பிடிக்கும் என்றார்.

பெஸ்ட் குக் அர்ச்சனா

பெஸ்ட் குக் அர்ச்சனா

அதனை தொடர்ந்து சோம சேகருக்கு மிஸ்டர் க்ளீன் என்ற விருது கொடுக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த சனம் ஷெட்டி, அவருடைய ஹார்ட் க்ளீன் என்பதால் அதை கொடுத்திருக்கலாம் என்றார். அடுத்தப்படியாக அர்ச்சனாவுக்கு பெஸ்ட் குக் விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அர்ச்சனா என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றார்.

ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிஷா

ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிஷா

அடுத்து சனம் ஷெட்டிக்கு மோஸ்ட் டிட்டர்மைண்ட் என்ற விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட சனம் ஷெட்டி, அடம் பிடிச்சதுக்கு கூட கொடுத்திருக்கலாம். தவறை நேருக்கு நேராய் கேட்டிருக்கிறேன் என்றார். அடுத்து நிஷாவுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்ற விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட நிஷா, இது எனக்கு பொருத்தமானதுதான் என்ற நிஷா, சந்தோஷம் என்றாலும் கோபம் என்றாலும் உள்ளே என்னை அடிச்சு அடிச்சு தீர்த்திருக்காங்க என்றார்.

போல்ட் அன்ட் பியூட்டிஃபுல்

போல்ட் அன்ட் பியூட்டிஃபுல்

அடுத்து சம்யுக்தாவுக்கு பெஸ்ட் லுக்கிங் விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட சம்யுக்தா உள்ளும் வெளியேயும் தான் குட் லுக்கிங்தான் என்றார். அடுத்து அனிதாவுக்கு போல்ட் அன்ட் பியூட்டிஃபுல் விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர் பல இடங்களில் தைரியமாய் கருத்துக்களை சொல்லியிருக்கிறேன். ஆகையால் இந்த விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றார்.

மோஸ்ட் லவ்வப்பிள் ஆஜித்

மோஸ்ட் லவ்வப்பிள் ஆஜித்

அடுத்து ஜித்தன் ரமேஷுக்கு மிஸ்டர் டோன்ட் கேர் விருது கொடுக்கப்பட்டது. எந்த பிரச்சனை என்றாலும் தலையிடாமல் இருந்ததால் இந்த விருதை கொடுத்திருக்கலாம் என்றார். அடுத்து ஆஜித்துக்கு மோஸ்ட் லவ்வப்பிள் என்ற விருது கொடுக்கப்பட்டது.

ஃபியர்லெஸ் சுச்சி

ஃபியர்லெஸ் சுச்சி

அடுத்து சுச்சிக்கு ஃபியர் லெஸ் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட சுச்சி தனக்கு இந்த விருது பொருத்தமானதுதான். பயப்படாமல் பல கருத்துக்களை கூறியிருக்கிறேன் என்றார். அவரை தொடர்ந்து வேல் முருகனுக்கு டியூட் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதனை பார்த்த கமல் அவரை ஹே டியூட் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

டான்ஸிங் டால் ஷிவானி

டான்ஸிங் டால் ஷிவானி

அவரை தொடர்ந்து ரேகாவுக்கு பிரேவ் ஹார்ட் என்ற விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட ரேகா, மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டேன். ஓபனாக பேசி விடுவேன் ஆகையால் இந்த விருதை கொடுத்திருக்கிறார்கள் என்றார். அடுத்து வந்த ஷிவானிக்கு டான்ஸிங் டால் என்ற விருது கொடுக்கப்பட்டது.

சிங்கப் பெண்ணெ ரம்யா

சிங்கப் பெண்ணெ ரம்யா

அதனை பெற்றுக் கொண்ட ஷிவானி, எனக்கு டான்ஸ் ஆடுவது பிடிக்கும். தினமும் வேக் அப் சாங்குக்கு சரியாக ஆடியிருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார். அடுத்து இரண்டாவது நபராக வெளியே வந்த நபருக்கு சிங்கப் பெண்ணே விருது கொடுக்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு ரம்யா, இதுவே எனக்கு போதும். சந்தோஷமாக இருக்கிறது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X